தந்தையின் இறுதிச்சடங்கை 'வீடியோ கால்' மூலமாக பார்த்த மகன்!... பூத உடலை ஜன்னல் வழியாக பார்த்து கதறிய சோகம்!.... கல் நெஞ்சையும் கரையவைக்கும் மகனின் பாசப் போராட்டம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா அறிகுறியால் வீடியோ கால் மூலம் தந்தையின் இறுதிச்சடங்கை மகன் பார்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த லினோ அபெல் என்ற இளைஞர், கட்டிலில் இருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையைக் காண, கத்தார் நாட்டில் இருந்து கடந்த 8ம் தேதி அவசரமாக சொந்த ஊர் திரும்பினார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையம் வந்திறங்கிய லினோவுக்கு லேசான இருமல் இருந்துள்ளது. இதனால், தாமாக முன்வந்து மருத்துவ அதிகாரிகளை அணுகி, கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டார். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லினோ அபெலின் தந்தை உடல்நலம் மிகவும் மோசமடைந்து கடந்த 9ம் தேதி மரணமடைந்தார்.

ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், கொரோனா அறிகுறியால் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால், தனது தந்தையின் உடலை நேரில் பார்க்க முடியாத சூழல் அவருக்கு ஏற்பட்டது. அதன் பின், மருத்துவமனையிலிருந்து தனது தந்தையின் உடல் ஆம்புலன்ஸில் செல்வதை அறையின் ஜன்னல் வழியாக பார்த்து கண்ணீர் வடித்தார், லினோ அபெல். இறுதியாக, மொபைல் வீடியோ கால் மூலமாக தனது தந்தையின் இறுதிச்சடங்கைப் பார்த்து அவர் துடித்துப் போன சம்பவம் பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, லினோ அபெலிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரியில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. கொரோனா இருக்கிறதா என எழுந்த ஒரே சந்தேகம் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத சோகத்தை இளைஞர் லினோ அபெலுக்கு ஏற்படுத்திவிட்டது.

 

KERALA, CORONAVIRUS, FATHER, SON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்