'சுற்றுச்சூழல் தினத்தில் மரம் நடுவது வழக்கம்'... 'ஆனா போலீசாரை பதற வைத்த ஒரே ஒரு செடி'... பரபரப்பை கிளப்பிய இளைஞர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலக சுற்றுச்சூழல் தினத்தைச் சிறப்பிக்கும் விதமாக மரம் நடுவது வழக்கம்.
!['சுற்றுச்சூழல் தினத்தில் மரம் நடுவது வழக்கம்'... 'ஆனா போலீசாரை பதற வைத்த ஒரே ஒரு செடி'... பரபரப்பை கிளப்பிய இளைஞர்கள்! 'சுற்றுச்சூழல் தினத்தில் மரம் நடுவது வழக்கம்'... 'ஆனா போலீசாரை பதற வைத்த ஒரே ஒரு செடி'... பரபரப்பை கிளப்பிய இளைஞர்கள்!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/kerala-youth-plant-ganja-on-world-environment-day-thum.jpeg)
உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் பொதுமக்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வண்ணம் மரம் நடுதல் போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள். ஆனால் இதே ஜூன் 5-ம் தேதி கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் நட்ட செடியால் போலீசார் அந்த இளைஞர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.
சுற்றுச்சூழல் தினத்தில் செடி நடுவதெல்லாம் குற்றமா எனக் கேட்டால் இல்லை, ஆனால் அந்த இளைஞர்கள் நட்டது கஞ்சா செடி. கேரள மாநிலம் குறிஞ்சாடி கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜூன் 5-ம் இளைஞர்கள் சிலர் வந்து சாலை ஓரத்தில் இரண்டு செடிகளை நட்டு அதனை தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். அப்படிப் போட்டோ எடுக்கும்போது ‘இந்த செடி இங்கேயே வளரட்டும்’ என்று வசனம் வேறு பேசி சென்றுள்ளனர்.
இதனைப்பார்த்த உள்ளூர் மக்கள் சிலர் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இரண்டு கஞ்சா செடிகளும் 30 செ.மீ மற்றும் 60 செ.மீ உயரத்தில் இருந்துள்ளது. இரண்டு செடிகளையும் காவல்துறையினர் அகற்றினர்.
இதனிடையே கஞ்சா செடிகளை நடவு செய்த நபர்கள் போலீஸாரிடம் பிடிபடவில்லை. கந்தசிரா பகுதியில் முன்பு கஞ்சா வழக்கில் சிக்கிய நபர் ஒருவர் கஞ்சா செடிகளைப் பராமரிப்பதாகவும் அந்த நபருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எப்படியும் உன் கல்யாணத்தை நடத்திருவேன் மா'... 'தைரியமா இரு'... மகளுக்காக வேற லெவலில் யோசித்த தந்தை!
- VIDEO: ‘பிள்ளை மாதிரி பார்த்துக்கிட்டாரு’!.. கண்ணீர் விட்டு அழுத யானை.. காண்போரை கலங்க வைத்த வீடியோ..!
- கையில 'திருமண அழைப்பிதழ்' கொண்டு வந்தா தான்... 'அதெல்லாம் நீங்க வாங்க முடியும், இல்லனா நோ சான்ஸ்...' - கேரள அரசு பிறப்பித்துள்ள 'அதிரடி' உத்தரவு...!
- 'லட்சத்தீவ காப்பாத்துங்க ப்ளீஸ்'!.. அரசியல் தலைவர்கள் முதல்... திரைப் பிரபலங்கள் வரை... ஒரே குரல்!.. என்ன நடக்கிறது?
- கேரள அமைச்சரவை வரலாற்றில் இதுதான் முதல்முறை.. யார் இந்த வீணா ஜார்ஜ்..? வெளியான சுவாரஸ்ய பின்னணி..!
- அவங்களுக்கு ஏன் அமைச்சரவையில் இடம் கொடுக்கல..? கடுமையாக எழுந்த கண்டனக்குரல்.. சைலஜா டீச்சருக்கு ‘புதிய’ பதவி..!
- கேரள புதிய அமைச்சரவையில்... ஷைலஜா டீச்சருக்கு இடமில்லை!.. ஏன்?.. என்ன நடந்தது?
- VIDEO: நூலிழையில் தப்பிச்சேன்னு சொல்லுவாங்களே.. அது ‘100 சதவீதம்’ இவருக்கு பொருந்தும்.. வைரல் வீடியோ..!
- VIDEO: எத்தனையோ சந்தோசமான நினைவுகள் 'அந்த வீட்டுல' நடந்துருக்கும்...! 'இப்படி ஒரே செகண்ட்ல வீடு இருந்த தடமே தெரியாம ஆயிடுச்சே...' - 'டவ் தே' புயலின் கோரத்தாண்டவம் ...!
- 'இந்த எல்லைய தாண்டி நீயும் வரக் கூடாது...' 'நானும் வரமாட்டேன்...' 'ஒருத்தருக்கு கூட கொரோனா இல்ல...' அப்படி என்ன பண்றாங்க...? - வியக்க வைக்கும் கேரள கிராமம்...!