‘திடீரென’ கேட்ட ‘அலறல்’ சத்தம்... ஓடிச் சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த ‘பேரதிர்ச்சி’... ‘நடுங்கவைக்கும்’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஆஷிகா (19). பியூட்டிஷன் கோர்ஸ் படித்து வந்த ஆஷிகாவிற்கு தனியார் பேருந்தில் நடத்துநராக வேலை செய்துவந்த அனு (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் ஆஷிகாவின் பெற்றோருக்குத் தெரியவர, அவர்கள் மகளைக் கண்டித்துள்ளனர். இதையடுத்து ஆஷிகாவும் அனுவுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். ஆனாலும் அவரை விடாத அனு, தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து கடந்த ஏப்ரல் மாதம் ஆஷிகாவின் பெற்றோர் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், அவர்கள் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசியுள்ளனர். அப்போது இனிமேல் ஆஷிகாவிற்கு தொந்தரவு தர மாட்டேன் என அனு போலீசாரிடம் கூறியுள்ளார். 

இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் ஆஷிகாவின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்ற அனு, தான் மறைத்து வைத்திருந்த சோடா பாட்டிலை உடைத்து ஆஷிகாவின் கழுத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளார். பின் அவர் அதே பாட்டிலால் தன்னையும் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைத்தொடர்ந்து ஆஷிகாவின் வீட்டுக்குள் இருந்து அலறல் சத்தம் கேட்க, அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்துள்ளனர். அப்போது ஆஷிகாவும், அனுவும் கழுத்தறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து அவர்கள் உறைந்துபோய் நின்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஆஷிகா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அனுவும் உயிரிழந்துள்ளார். காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு இளைஞர் ஒருவர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CRIME, MURDER, KERALA, LOVE, TEENGIRL, BOY, SUICIDE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்