VIDEO : 'பார்வையற்ற நபர்' பஸ் 'ஏற' உதவி செய்த பெண்... வீடு தேடி வந்த 'ஜாக்பாட்' பரிசு...! - 'இன்ப அதிர்ச்சி'யில் கண்ணீர் விட்டு 'அழுகை'...!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் சில தினங்களுக்கு முன், பார்வையற்ற நபர் ஒருவர் பேருந்தை பிடிக்க சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த பேருந்து கிளம்பி சென்ற தயாராக இருந்த நிலையில், அவருக்கு உதவி செய்யும் வகையில் பெண் ஒருவர் ஓடிச் சென்று, நடத்துனரிடம் பேருந்தை நிறுத்துமாறு கூறி, அந்த பார்வையற்ற நபரை பேருந்தில் ஏற்றி விட்டு உதவி செய்தார்.

VIDEO : 'பார்வையற்ற நபர்' பஸ் 'ஏற' உதவி செய்த பெண்... வீடு தேடி வந்த 'ஜாக்பாட்' பரிசு...! - 'இன்ப அதிர்ச்சி'யில் கண்ணீர் விட்டு 'அழுகை'...!!!

இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், அந்த இளம்பெண் பெயர் சுப்ரியா என்பது தெரிய வந்தது. மேலும், வாடகை வீட்டில் வசிக்கும் அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். சுப்ரியாவின் இந்த மனிதாபிமான செயலுக்கு பல தரப்பினரிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

சுப்ரியா ஆலுக்காஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வரும் நிலையில், அவரது பெருந்தன்மையை பாராட்டி ஆலுக்காஸ் குழுமத் தலைவர் ஜாய் ஆலுக்காஸ் வீடு தேடி வந்து சுப்ரியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து, திருச்சூரில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு வந்து சந்திக்குமாறு கூறி சென்றுள்ளார்.

இதனையடுத்து, ஆலுக்காஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு சுப்ரியா சென்ற நிலையில், அவருக்கு இன்ப அதிர்ச்சியாக, அவரது செயலை பாராட்டி புதிய வீடு பழங்கப்படும் என ஜாய் ஆலுக்காஸ் தெரிவித்துள்ளார். 'இவ்வளவு பெரிய ஆச்சர்யம் இருக்கும் என நான் நினைக்கவில்லை. 100 ஊழியர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்த போது எனக்கு அழுகையே வந்து விட்டது. மனிதாபிமானத்துடன் நான் செய்த செயல், எனக்கு இத்தனை பாராட்டையும், அன்பையும் வாங்கி கொடுக்கும் என ஒரு போதும் நினைத்ததில்லை' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்