நீ டிரெஸ் போடாம இருக்குற ஃபோட்டோஸ் என்கிட்ட இருக்கு.. தொழிலதிபரை கூல்டிரிங்க்ஸ் குடிக்க வைத்து.. இளம்பெண் போட்ட திட்டம்
முகப்பு > செய்திகள் > இந்தியாகாக்கநாடு : இளம் தொழிலதிபர் ஒருவரை மிரட்டி, பல லட்சம் பணத்தை, பெண் ஒருவர் பறித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், காக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் ஷிஜி மோள் (வயது 34). அப்பகுதியிலுள்ள NGO Quarters பலச்சுவடு அருகேயுள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இளம் தொழிலதிபர் ஒருவருடன், சிஜி மோளுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், அந்த தொழிலதிபர், ஷிஜி மோளை சந்திக்க வேண்டி, அவரது அபார்ட்மென்ட்டிற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
ஷிஜி மோள்
அப்போது, அந்த இளைஞருக்கு கூல் டிரிங்க்ஸினை குடிக்கக் கொடுத்துள்ளார் ஷிஜி. அதில், போதை மாத்திரையை ஷிஜிமோள் கலக்கி கொடுக்க, சிறிது நேரத்தில் அந்த இளைஞர் மயக்கமும் அடைந்துள்ளார். இதன் பிறகு, அந்த இளைஞரை, நிர்வாணமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் ஷிஜிமோள் எடுத்துள்ளார்.
பணம் கேட்டு மிரட்டல்
இந்த சம்பவம் முடிந்து, தனக்கு என்ன நடந்தது என்பதை இளைஞர் தெரியாமல் இருந்த நிலையில், இரண்டு நாட்கள் கழித்து அவருக்கு ஷிஜி மோள் போன் செய்துள்ளார். நான் கேட்கும் பணத்தை நீ தரவில்லை என்றால், உனது நிர்வாண புகைப்படங்களை, உன் குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவேன். அதே போல, சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றி விடுவேன் என அந்த இளைஞரை, ஷிஜி மோள் மிரட்டியுள்ளதாகவும் தெரிகிறது.
அதன் பெயரில், இளைஞரிடம் இருந்து, 20 லட்சம் வாங்கிக் கொண்ட ஷிஜி மோள், மீதமுள்ள 18 லட்ச ரூபாய் பணத்தை, தான் கர்ப்பமாக இருப்பதால், இந்த அபார்ட்மெண்டில் தங்க முடியாது. எனவே, புதிய வீடு ஒன்றை சொந்தமாக வாங்க வேண்டும் என பொய் கூறி, வாங்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
விபரீத முடிவு
தொடர்ந்து, அந்த இளைஞரை மிரட்டி வந்த ஷிஜி மோள், இனி பணம் தரவில்லை என்றால், நேராக வீட்டிற்கே வந்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால், மனமுடைந்த அந்த இளைஞர், தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை. இனி மேல், பொறுமையாக இருந்தால், அதில் பயனில்லை என முடிவு செய்த இளைஞர், போலீஸ் நிலையத்தில் ஷிஜி மோள் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
போலீசார் விசாரணை
தொடர்ந்து, இது தொடர்பாக விசாரணையை நடத்திய போலீசார், ஷிஜி மோளைக் கைது செய்தனர். அது மட்டுமில்லாமல், ஷிஜி மோளின் பெயரில், வரப்புழா பாலியல் புகார் வழக்கு ஒன்றும் உள்ளது. மேலும், இது போன்று வேறு வழக்குகளில், ஷிஜி மோளுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும், போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சாப்பிட்ட உடனே டயர்டு ஆகுது.. 7 வருஷமா மனைவியின் சமையலில் மறைந்திருந்த ரகசியம்.. கிச்சனில் கேமரா மாட்டிய கணவனுக்கு.. தெரிய வந்த அதிர வைக்கும் உண்மை
- வீடு புகுந்து பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற எதிர்வீட்டு வாலிபர்.. சிக்கிய திருநங்கை.. சென்னையில் அதிர்ச்சி..!
- திருடுன எல்லா பொருளையும் நீங்களே வச்சிக்கோங்க.. ஆனா இதை ஒன்ன மட்டும் திருப்பி கொடுத்திடுங்க.. கொள்ளையர்களிடம் தம்பதி வைத்த உருக்கமான வேண்டுகோள்..!
- ஒரே 'லாட்டரி'.. ஓஹோனு வாழ்க்கை.. கேரள பெண்ணுக்கு வெளிநாட்டுல அடிச்ச மெகா ஜாக்பாட்
- என்ன விட்டு போயிட்டியேமா.. கதறி துடித்த தந்தை.. நீளமான தலைமுடியால் வந்த ஆபத்து
- நாகப்பாம்பு கடித்ததால் கோமா நிலை.. வா வா சுரேஷ் எப்படி இருக்கிறார்? மருத்துவர்கள் தரும் விளக்கம்!
- கல்லூரி வினாத்தாளில் மின்னல் முரளி: ஒரு பேராசிரியரின் ரசிக்க வைக்கும் ருசிகரமான கேள்விகள்!
- கர்ப்பிணி மனைவியை காணவில்லை.. புகாரளித்த கணவர்.. போன் சிக்னல் கோயம்பத்தூர்'ல இருக்கு.. கிளைமேக்சில் செம ட்விஸ்ட்
- ப்ளீஸ், நான் இறந்து போகணும்.. கேரள அரசிடம் விண்ணப்பித்த திருநங்கை.. நான் வேற என்னங்க பண்ணுவேன்?
- திடீரென தீ பிடித்து எரிந்த லாரி.. பயத்தில் குதித்த டிரைவர்.. மறுநொடியே வந்த நபர் சூப்பர் ஹீரோவாக மாறி சாகசம்