பேஸ்புக் மூலம் உருவான 'நட்பு'.. காணாமல் போன சிறுமி.. அந்த பொண்ணு கிட்ட பேசுனது ஆம்பளயே இல்ல.. ட்விஸ்ட் அடித்த விவகாரம்
முகப்பு > செய்திகள் > இந்தியாஆலப்புழா : கேரள மாநிலத்தில், சிறுமி ஒருவர் கடத்திச் சென்றதாக புகார் எழுந்த நிலையில், விசாரித்த போலீசாருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம், மாவேலிக்கரா பகுதியைச் சேர்ந்த 15 வயது ஆகும் சிறுமி ஒருவர், பிளஸ் 1 படித்து வந்துள்ளார்.
அப்போது, சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம், அந்த சிறுமி, ஆண் நண்பர் ஒருவருடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும், நட்பாக பழகி வந்ததாகவும் தெரிகிறது.
பதறிய பெற்றோர்
இதனிடையே, கடந்த ஒரு வாரத்திற்கு முன், அந்த பள்ளிச் சிறுமியை, அவரது வீட்டிற்கே வந்து, பேஸ்புக் நண்பர் கடத்திச் சென்றதாக தகவல்கள் வெளியானது. இதனால், பதறிப் போன அந்த சிறுமியின் பெற்றோர், மகள் காணாமல் போனது பற்றி, காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
மொபைல் சிக்னல்
இதனைத் தொடர்ந்து, அந்த சிறுமியை கடத்திச் சென்றவரை பற்றி, போலீசார் தீவிரமாக தேடி வந்துள்ளனர். அதன் படி, சைபர் க்ரைம் உதவியுடன் அவர்கள் இருவரின் மொபைல் போன் சிக்னலை ஆய்வு செய்த போது, போலீசாருக்கு சில தகவல் தெரிய வந்துள்ளது. திருச்சூர் பகுதியில், அவர்கள் இருவரும் இருப்பது தெரிய வந்த நிலையில், உடனடியாக அங்கு போலீசார் விரைந்து சென்றுள்ளனர்.
கடத்தியது ஆணல்ல
அதன் பின், திருச்சூர் பகுதியில் தங்கியிருந்த சந்தியா என்ற பெண்ணை போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர். தொடர்ந்து, அவரிடம், ஆண் போல பேசி, சிறுமியைக் கடத்திச் சென்றவர் சந்தியா என்ற பெண் என்பது தெரிய வந்தது. மேலும், இதே போல, கடந்த 2016 ஆம் ஆண்டில், 14 வயது சிறுமி ஒருவரை, தொல்லை கொடுத்து கடத்திச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்த போலீசார்
அந்த சிறுமியை இவர் ஏன் கடத்திச் சென்றார் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை. தொடர்ந்து, சந்தியாவிடம் இருந்து சிறுமியை மீட்ட போலீசார், அவரை பெற்றோர்களிடம் அனுப்பி வைத்ததாக கூறப்படும் நிலையில், ஏமாற்றிக் கடத்திச் சென்ற சந்தியாவை, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர்.
ஒரு குழந்தையும் உள்ளது
27 வயதாகும் சந்தியா, திருவனந்தபுரம் மாவட்டம், வீரன்னபுரம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி, ஒரு குழந்தையும் உள்ளதாகவும், சந்தியா சற்று மனநிலை சரியில்லாதவர் என்றும் கூறப்படுகிறது. மேலும், சமூக வலைத்தளங்களில், ஆண் வேடத்தில் தோற்றமளிக்கும் சந்தியா, ஆணின் புனைப்பெயர் கொண்டு, சிறுமியிடம் நட்பாக பழகி வந்ததாக தெரிகிறது.
மற்ற செய்திகள்
எவரெஸ்ட் சிகரத்தை விட அதிக உயரத்திற்கு அடுக்கலாம்.. இந்தியாவில் விற்ற 350 கோடி DOLO 650 மாத்திரைகள்!
தொடர்புடைய செய்திகள்
- அய்யா, என் மகன காணோம்.. அழுது புலம்பிய பெற்றோர்.. போன் சிக்னல் வெச்சு டிரேஸ் பண்ணி பாத்தப்போ தான் பெரிய ட்விஸ்ட்டே
- 2200 ரூபாய் கொடுத்து 2 ஆணுறை வாங்கிய நபர்.. நேரம் பார்க்க ஆசைப்பட்டவருக்கு நேரம் சரியில்ல..!
- இறைச்சி வாங்க கடைக்கு போன மனுஷன்.. கோடீஸ்வரராக வீடு திரும்பினார்.. சில மணி நேரங்களில் அடித்த ஜாக்பாட்!
- ஷாப்பிங் மால் அடிக்கடி போவீங்களா.. உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
- செல்போனுக்கு 'தாலி' கட்டி நடந்த திருமணம்! என்கேஜ்மென்ட் முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆச்சு.. பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு!
- கேரளா 'couple share' குழுவில் இருந்த 100 மனைவிகள் ஏற்கனவே.. விசாரணையில் வெளிவந்துள்ள புதிய தகவல்!
- ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி 'ஒருநாள்'.. கேரளாவில் மனைவிகளை 'எக்ஸ்சேன்ஞ்' செய்வது குறித்து வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்!
- ஏன் மனைவியை பகிர்ந்துக் கொள்கிறார்கள்..? கேரளாவை உலுக்கிய வழக்கு குறித்த உளவியல் பின்னணி
- ஒரே வீடியோ.. டோட்டல் டேமேஜ்.. டேமேஜான ரோட்டைக் கண்டு கொதித்து குழந்தை எடுத்த நிரூபர் அவதாரம்! - வீடியோ
- Couple Sharing குழு வழக்கு.. '14 ஆயிரம்' ரூபா குடுத்து.. இந்த தப்ப வேற பண்ணிருக்காங்க.. தோண்டி பார்த்ததில் கிடைத்த 'ஷாக்' ரிப்போர்ட்