கிரைண்டரில் சிக்கிய துப்பட்டா.. திடீர்னு கேட்ட அலறல் சத்தம்.. பிறந்தநாள் அன்று இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் இளம்பெண் ஒருவர் தனது பிறந்தநாள் அன்று உயிரிழந்திருக்கிறார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | மொத்த நகரமே ஒரு கட்டிடம் தான்.. ஸ்கூல், போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் உள்ளேயே இருக்கு.. இப்படியும் ஒரு இடமா.?
கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள தலப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சன். இவருடைய மனைவி ஜெயஷீலா (வயது 24). கடந்த வருடம் ரஞ்சன் - ஜெயஷீலா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்று இருக்கிறது. திருமணம் முடிந்த பிறகு ஜெயஷீலா தனது வீட்டுக்கு அருகில் உள்ள பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று ஜெயஷீலாவிற்கு பிறந்தநாள் என்பதால் வீட்டில் சிறிய பிறந்தநாள் விழா நடைபெற்றிருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
அதன் பின்னர் அருகில் உள்ள பேக்கரியில் வேலைக்குச் சென்ற ஜெயசீலா கிரைண்டரில் மாவு அரைத்து இருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அவருடைய துப்பட்டா கிரைண்டருக்குள் சிக்கி இருக்கிறது. இதனால் படுகாயம் அடைந்த ஜெயஷீலாவை அருகில் இருந்தவர்கள் உடனடியாக வீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கின்றனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இதனால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இதனிடையே ஜெயஷீலாவின் கணவர் ரஞ்சன் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட பின்னர் பணிக்கு சென்ற ஜெயஷீலா துரதிருஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் அவரது உறவினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
இதனைத் தொடர்ந்து இது குறித்து தலப்பாடி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தலப்பாடி காவல் நிலைய அதிகாரிகள் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் தன் பிறந்தநாள் அன்று இளம்பெண் பலியான சம்பவம் தலப்பாடி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | மருத்துவராகும் கனவு.. திருமணம் முடிந்த அடுத்த நிமிஷமே லேப் கோட்டுடன் தேர்வுக்கு போன புதுமணப்பெண்.. வீடியோ..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- எப்போதும் செல்போனிலேயே மூழ்கிக்கிடந்த இளம்பெண்.. பறிபோன பார்வை.. மருத்துவர் கொடுத்த '20-20-20' அட்வைஸ்.. என்னப்பா அது..?
- இன்னும் 3 நாளுல கல்யாணம்.. 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.!
- பிறந்தநாளில் மாணவிக்கு அடிச்ச ஜாக்பாட்.. அடுத்து நடந்ததுதான் ஹைலைட்..!
- ஆசையாய் வளர்த்த நாயின் மரண சோகம் தாங்காத இளம்பெண்.. திடீரென எடுத்த அதிர்ச்சி முடிவு
- "37 வருஷம் முன்னாடி நடந்த கொலையில் ஒரு கனெக்ட் இருக்கு".. 31 வயசு பெண்ணுக்கு வந்த போன் கால்.. "ஒரு நிமிஷம் பேச்சு மூச்சே வரல"
- ஜன்னல் சீட்டுக்காக பஸ், ட்ரெயின்ல இல்ல.. Flight -ல நடந்த சண்டை.. முட்டி மோதிக் கொண்ட பெண்கள்!!
- தோளில் குழந்தை, கையில் கேமரா.. "இந்த பாசத்துக்கு முன்னாடி ஏதாச்சும் ஈடாகுமா?".. மனதை குளிர வைத்த வீடியோ!!
- "அவரு அப்ப சாகல".. 100 வருஷம் முன்னாடி நடந்த குற்றம்.. கடிதங்கள் மூலம் இளம்பெண் கண்டுபிடிச்ச திடுக்கிடும் விஷயம்!!
- "கர்ப்பமான ஆண்?".. இந்தியாவில் முதல் முறை..! கவனம் ஈர்த்த மூன்றாம் பாலின தம்பதி!!
- "ஒரு உயிர் வரபோற நேரத்துல".. கர்ப்பிணி பெண், கணவர் பயணித்த காரில்.. திடீரென நடந்த அசம்பாவிதம்!!