ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி 'ஒருநாள்'.. கேரளாவில் மனைவிகளை 'எக்ஸ்சேன்ஞ்' செய்வது குறித்து வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளா: கேரளாவில் மனைவிகளை எக்ஸ்சேன்ஞ் செய்து கொள்ளும் குழு குறித்து பரபரப்பு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

கப்பிள் ஷேரிங்:

கேரளாவில்  'கப்பிள் ஷேரிங்', 'ஒய்ப் சுவாப்பிங்' என்ற பெயரில் சமூக வலைத்தளங்கள் மூலம் கணவர்கள் தங்கள் மனைவிகளை மற்றவர்களுக்கு மாற்றிக்கொடுத்து உல்லாசம் அனுபவிக்கும் குழுக்கள் குறித்து பரபரப்பு தகவல் வெளியானது.

இந்த குழுக்கள் எப்போது ஆரம்பித்தது?

ஆனால் இந்த குழுக்கள் இரண்டுகளுக்கு முன்பே இருந்து செயல்பட்டு வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 2 ஆண்டுகளுக்கு முன்பு புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காத தகவலும் வெளியாகி உள்ளது.

இரண்டாயிரம் தம்பதிகள்:

மனைவிகளை கைமாற்றும் இந்த குழுவில் சுமார் 2 ஆயிரம் தம்பதிகள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.  வெளியாகியுள்ளது. இந்த கொடூர சம்பவம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியை அடுத்த கருகச்சால் என்ற இடத்தை சேர்ந்த, பாதிக்கப்பட்ட இளம் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போதைய் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் கணவர் உள்பட 13 பேர் கைது செய்துள்ளனர். இந்த குழுவில் முக்கிய பிரமுகர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

கொச்சியில் மாநில மகளிர் ஆணைய தலைவி பேட்டி:

மேலும் இந்த சம்பவம் குறித்து கொச்சியில் மாநில மகளிர் ஆணைய தலைவி பி.சதி தேவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த குழுக்களால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், கணவர் உட்பட பல்வேறு ஆண்களால் பல கஷ்டங்களை அனுபவித்து உள்ளனர். இளம்பெண்ணின் துணிச்சல் மிக்க புகாரின் பேரிலேயே இந்த சமூக விரோத செயல்பாடுகள் வெளிஉலகுக்கு தெரிய வந்துள்ளது. மாநில போலீஸ் டி.ஜி.பி. தலைமையில் உயர் மட்ட குழு அமைத்து மனைவிகளை கைமாற்றும் சமூகவிரோத கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

மேலும், 2 ஆண்டுகளுக்கு முன்பே பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் கோட்டயம் போலீசில் புகார் கொடுக்க சென்றுள்ளார். அப்போது புகாரை போலீசார் பொருட்படுத்தவில்லை என்றும் பெண்ணின் கணவரை அழைத்து சமரசம் செய்து வைத்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு காரணமாக, இந்த சமூக வலைத்தள குழுவில் பல முக்கிய புள்ளிகளின் மனைவிகளும் இணைந்து இருந்ததால் அதனை கண்டு கொள்ளாமல் போலீசார் இருந்து உள்ளதாக கூறப்படுகிறது.

KERALA, WIFES, SWAPPING, கேரளா, மனைவி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்