கேரளாவில் பிரபல 'திருநங்கை' ஆர்.ஜே அனன்யா 'மர்ம' மரணம்...! 'சிரிக்குறப்போ கூட வலிக்குது...' - சமீபத்தில் அளித்த பேட்டியின் மூலம் தெரிய வந்த 'பகீர்' பின்னணி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் பிரபல திருநங்கை ஆர்.ஜே அனன்யா குமாரி அலெக்ஸ் வீட்டில் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் பிரபல 'திருநங்கை' ஆர்.ஜே அனன்யா 'மர்ம' மரணம்...! 'சிரிக்குறப்போ கூட வலிக்குது...' - சமீபத்தில் அளித்த பேட்டியின் மூலம் தெரிய வந்த 'பகீர்' பின்னணி...!

கேரளாவின் முதல் திருநங்கை ரேடியோ ஜாக்கி (ஆர்.ஜே) என்ற புகழுக்கு உரியவர் அனன்யா குமாரி அலெக்ஸ். இவர் கொச்சியில் உள்ள அவருடைய குடியிருப்பில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார். இது தற்கொலையா கொலையா என்ற ரீதியில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீப காலத்தில் அனன்யா தான் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட மருத்துவமனையின் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

kerala transgender RJ Ananya Kumari Alex recovered house

தான் செய்துகொண்ட அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடக்கவில்லை எனவும், தன்னுடைய சிகிச்சை பதிவுகளை கொடுக்க சம்பந்தப்பட்ட மருத்துவமனை மறுத்து வருவதாகவும் அனன்யா கூறி வந்தார்.

அதுமட்டுமில்லாமல் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்த பின் தன்னுடைய உடல் பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் மீது சமீபத்தில் அனன்யா குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து பேட்டியளித்த அனன்யா, 'நான் பாலியல் அறுவைசிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனை என்னுடைய அறுவை சிகிச்சையை ஒழுங்காக நடத்தவில்லை. நான் நினைத்ததற்கு மாறாக இந்த அறுவைச் சிகிச்சையில் எனது தனிப்பட்ட பகுதி கத்தியால் இரக்கமின்றி வெட்டப்பட்டு இருக்கிறது.

ஒரு மருத்துவ அலட்சியத்தின் பலியாக நான் உங்கள் முன் நிற்கிறேன். அறுவைச் சிகிச்சைக்கு பிறகு என் பிறப்புறுப்பு பகுதியில் கடுமையான வலி உள்ளது. நான் நீண்ட நேரம் நிற்கும்போது, தும்மும் போது, சிரிக்கும் போது அல்லது பல் துலக்கும் போது கூட கடுமையான அசௌகரியங்களை எதிர்கொள்கிறேன். மேலும், சுவாச சிரமங்களையும் அனுபவித்து வருகிறேன். என்னுடைய வலியை விவரிக்க முடியாது' எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது அனன்யா பிரேதமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்