'தீக்காயத்துடன் வந்த நபர்'.. நடுரோட்டில் பெண் போலீஸ்க்கு நேர்ந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெண் போலீஸ் அதிகாரியை கேரளாவின் மாவேலிக்கரையில் நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றுள்ள சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் ஆலப்புழாவுக்குட்பட்டது மாவேலிக்கரை அருகில் இருக்கும் வள்ளிக்குந்நு காவல் நிலையம். இங்கு சிவில் போலீஸாராக பணிபுரிந்து வந்த 31 வயது சௌமியா, பணிமுடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில், அவரது பின்னாலேயே சென்ற கார் ஒன்று சௌமியா மீது மோதியது.

இதில் கீழே விழுந்த சௌமியா நிலைதடுமாறி, எழுந்து ஓடமுயன்றார். ஆனால் காரில் இருந்து இறங்கிய இளைஞர்,  சௌமியாவை விரட்டிப் பிடித்து அரிவாளால் வெட்டினார். அதன் பின் கீழேவிழுந்த சௌமியாவை மேற்கொண்டு அந்த இளைஞர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றுள்ளார்.

அப்போது பொதுமக்கள் கூடவே, தப்பியோட முயன்ற அந்த இளைஞரை மக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். ஆனால் அந்த இளைஞரும் தீக்காயத்துடன் இருந்துள்ளார். இதனால் அவரை போலீஸார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

விசாரணையில், அந்த சௌமியாவின் கணவர் புஷ்கரன் வெளிநாட்டில் இருப்பதும், அவர்களுக்கு 3 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் சௌமியாவின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த அந்த நபர் 33 வயதான அஜாஸ் என்பதும், அவர் ஆலுவாவில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

KERALA, POLICE, BIZARRE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்