"என்ன, இதுக்காகவா 250 ரூபா 'Fine' போட்டாங்க??.." போலீஸ் கொடுத்த ரசீது பாத்து குழம்பிப் போன 'நெட்டிசன்கள்'!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சாலைகளில் செல்லும்போது அங்கே நாம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பல உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "அப்பாடா, அத நம்புறது நாம மட்டும் கிடையாது.." ஆனந்த் மஹிந்தராவின் வேடிக்கையான ட்வீட்.. மனுஷன் கேப்ஷன் தான் சும்மா அள்ளுது!!

அளவுக்கு அதிகமான ஆட்களை பைக்கில் ஏற்றுவது, ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டுவது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டால், அதற்கான அபராதத்தையும் போலீசார் விதிப்பார்கள். அப்படி அபராத தொகைக்கான ரசீதும் போலீஸ் மூலம் உடனடியாக வழங்கப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

இந்த நிலையில் தான், கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ள ரசீது தொடர்பான புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

அபராத தொகைக்கான ரசீதில் என்ன இருக்கப் போகிறது என்பதே பலரின் கேள்வியாக இருக்கும். ஆனால், அதில் அந்த இளைஞர் செய்த குற்றத்திற்கான காரணம் தான் ஹைலைட்டான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாசில் ஷ்யாம் என்ற நபர், தன்னுடைய பைக்கில் வேகமாக அலுவலகம் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவர் ஒரு வழி பாதையின் எதிர் திசையில் வந்ததால், அப்பகுதியில் இருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்துள்ளனர்.

மேலும், தவறான பாதையில் வந்ததற்காக 250 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட, அதற்கான ரசீது வாங்கிக் கொண்டு அலுவலகம் சென்றுள்ளார். அலுவலகம் சென்ற பிறகு, தனக்கு வழங்கப்பட்ட ரசீதை பார்த்த போது தான், பாசிலுக்கு கடும் வியப்பு ஒன்று காத்திருந்தது. அதாவது, அபராதத்திற்கான காரணத்தில், போதுமான அளவு பெட்ரோல் இல்லாமல் வண்டி ஓட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைக் கண்டதும் குழப்பத்தில் உறைந்த பாசில், உடனடியாக தனக்கு தெரிந்த சில சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இப்படி எதுவும் விதி இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அதன் பின்னர் தான், இந்த விவரம் தொடர்பாக போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

கேரளாவில் சரியான அளவு எரிபொருள் இல்லாமல் வாகனம் இருப்பதற்கு அபராதம் உண்டு. ஆனால், அது சொந்த பயன்பாட்டிற்கு இயங்கும் வாகனங்களுக்கு கிடையாது. பயணிகளை ஏற்றிச் செல்லும் வேன், டாக்சி  உள்ளிட்ட வாடகை வாகனங்கள் சரியான அளவு எரிபொருள் இல்லாமல் இயக்கினால் அபராதம் செலுத்த வேண்டும்.

அப்படி அந்த இளைஞர் தவறான வழியில் வந்ததற்காக அபராதத்தை கொடுப்பதற்கு பதிலாக, தவறான காரணத்தை மெஷினில் போலீசார் குறிப்பிட்டுள்ளனர். அப்படி அவர் தவறாக குறிப்பிட்ட அபராத ரசீது தான், இணையத்தில் தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | "இன்னும் 48 மணி நேரம் தான் உயிரோட இருப்பீங்க.." சோகத்தில் ஆழ்ந்த இளைஞர்.. கடைசி நேரத்தில் மனம் உருக வைத்த 'சர்ப்ரைஸ்'!!

KERALA, TRAFFIC CHALLAN, FINE, YOUTH, TRAFFIC CHALLAN FOR FINE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்