உச்சக்கட்ட வறுமை.. மகனின் ஆசிரியையிடம் 500 ரூபாய் கடன் கேட்ட தாய்.. இரண்டே நாளில் நடந்த அற்புதம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்த உலகில் பல இடங்களில் அதிர்ச்சியான செய்திகளை நாம் கேள்விப்படும் அதே வேளையில் சில மனதை நெகிழ வைக்கக் கூடிய வகையிலான செய்திகளும் அதிகம் வைரலாகி மனம் உருகவும் வைக்கும்.
மனிதாபிமானத்துடன் ஏரளமானோர் செயல்படுவது தொடர்பாக சில செய்திகள் வெளியாகும் சமயத்தில் நம்மிடையே ஒரு தாக்கத்தையும் அவை உருவாக்கி தான் செல்லும்.
அந்த வகையில் ஒரு செய்தி தான் தற்போது அதிகம் வைரலாகி, பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
கேரளாவின் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் சுபத்ரா. இவரது கணவர் கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென உயிரிழந்து போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. சுபத்ராவுக்கு மூன்று குழந்தைகள் உள்ள சூழலில், அவரது கணவர் திடீரென உயிரிழந்தும் போனதால் குடும்ப தேவைகளை சரி செய்ய மிகவும் சிரமப்பட்டு சுபத்ரா வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழலில் உணவுக்கு கூட கஷ்டப்படும் நிலை இருந்ததாக கூறப்படும் நிலையில், தனது மகன் அபிஷேக்கின் ஆசிரியையான கிரிஷா ஹரிஷ்குமார் என்பவரிடம் 500 கடனாக தாருங்கள் என்றும் சுபத்ரா கேட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், தனது மாணவனின் குடும்பத்தினருக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டுமென கிரிஷா நினைத்துள்ளார்.
மேலும் சுபத்ராவின் குடும்ப வறுமை நிலையை போக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டுமென முடிவு எடுத்த கிரிஷா, சுபத்ரா குடும்ப சூழலைக் குறிப்பிட்டு தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து நிதி திரட்டவும் முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. சுபத்ராவின் வங்கி கணக்கு விவரங்களையும் அவர் அதில் குறிப்பிட்டிருந்த நிலையில் கிரிஷாவின் இந்த பதிவு வேகமாக பரவ தொடங்கியது.
சுபத்ரா நிலையை அறிந்து பலரும் உதவ முன்வர 2 நாட்களில் சுமார் 51 லட்சம் ரூபாய் வரை அவரது வங்கி கணக்கில் நிதி திரட்டப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றது.
இது பற்றி பேசும் கிரிஜா, "என்னிடம் சுபத்ரா 500 ரூபாய் கேட்டார். நான் 1000 ரூபாய் கொடுத்து விட்டு உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேணடும் என கூறினேன். அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது மிகவும் வறுமையான நிலையில் இருந்தது. குழந்தைகள் சாப்பிடுவதற்கு கூட எதுவுமில்லாத சூழல் இருந்ததால் அவருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என நினைத்தேன்" என அவர் கூறி உள்ளார்.
வறுமையால் 500 ரூபாய் கடன் கேட்ட பெண்ணின் குடும்ப சூழ்நிலையை மாற்றியமைத்த ஆசிரியையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Also Read | முதல் டெஸ்ட் 2010-ல, 2வது 2022-ல.. 12 வருடம் கழித்து முதல் விக்கெட் எடுத்த உனத்கட்!! குவியும் வாழ்த்துக்கள்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அட, இந்தாங்க சாவிய புடிங்க".. காரை போட்டோ எடுத்த இளைஞருக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!!
- "கால்பந்து ஃபீவர்ன்னா இதான் போலயே".. மெஸ்ஸி, எம்பாப்பே டீ ஷர்ட் அணிந்து தான் கல்யாணமே.. இணையத்தை கலக்கும் ஜோடி!!
- டிவி பாத்துட்டு இருந்த சிறுமி.. திடீர்ன்னு செல்ல நாய் கொடுத்த அலெர்ட்.. "இதுக்கு பேர்தான் க்ரைம் பார்ட்னர்ஷிப்பா".. செம வீடியோ!!
- அர்ஜென்டினா அணியின் வெற்றியை கொண்டாடிய கேரள வாலிபருக்கு நேர்ந்த துயரம்!!
- "அவங்க உருவில் என் அம்மாவை பார்த்தேன்".. ஐஏஎஸ் அதிகாரியை நெகிழ வைத்த இளம்பெண்.. வைரலாகும் கலெக்டரின் பதிவு..!
- "மகனுக்காக பீரங்கியையே கொண்டு வந்து நிறுத்திய ராணுவ வீரர்.. ஆனா ஒரு சூப்பர் ட்விஸ்ட்..!
- ஐயப்பன் கோவிலுக்கு போன பக்தர் வாங்கிய லாட்டரிக்கு விழுந்த ₹80 லட்சம்.. பரிசு வென்றவரை தேடியலையும் கடை உரிமையாளர்..!
- மனைவிக்காக நடுராத்திரி பூஜை.. கணவர் செஞ்ச பகீர் காரியம்.. சுற்றி வளைத்த போலீஸ்..!
- தனக்காக வாழ்க்கையை தியாகம் செய்த அம்மா.. மறுமணம் செய்து அழகு பார்த்த மகள்.. மனதை உருக வைக்கும் காரணம்!!
- தொடர்ந்து 49 ஆண்டு பக்தி பயணம்.. 99 வயதிலும் சபரிமலை ஐயப்பனை காண வந்த வைரல் பாட்டி..!