"அந்தப் புள்ள நல்ல படியா தேர்வு எழுதினா போதும்!".. ஒற்றை பள்ளி மாணவிக்காக... ஒட்டு மொத்த அரசும் உதவிய நெகிழ்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் ஒற்றை பள்ளி மாணவி தேர்வு எழுவதற்காக 70 பேர் இருக்கை கொண்ட படகு இயக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆழப்புழாவைச் சேர்ந்த பள்ளி மாணவி, சான்ரா பாபு. இவர் கோட்டயத்தில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இவரது பெற்றோர் தினக்கூலிகளாக வேலை செய்கின்றனர்.
ஊரடங்கு காரணமாக அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பள்ளி இறுதியாண்டுத் தேர்வு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரிய பொருளாதார பின்னணி எதுவும் இல்லாத காரணத்தால், தங்களுடைய மகளால் தேர்வினை எழுத முடியாது என்று சான்ராவின் பெற்றோர் வருந்தியுள்ளனர்.
இந்நிலையில், கேரள மாநிலத்தின் நீர்வழிப் போக்குவரத்து துறையை அணுகிய மாணவி சான்ரா, தன்னுடைய நிலைமையை அதிகாரிகளிடம் விளக்கியுள்ளார். மாணவியின் கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள் அவருக்காக படகுப் போக்குவரத்தை ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தனர்.
அதைத் தொடர்ந்து, மே மாதம் 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில், 70 பேர் இருக்கை கொண்ட படகு ஒரே ஒரு பயணியான மாணவி சான்ராவிற்காக இயக்கப்பட்டது. மேலும், சரியான நேரத்தில் மாணவியை பள்ளியில் கொண்டு சேர்த்தோடு, தேர்வு முடியும் வரை அவருக்காக காத்திருந்து மீண்டும் அவரை வீட்டுக்கு கொண்டு பத்திரமாக சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய போக்குவரத்து அதிகாரி ஒருவர், 'ஒரு ட்ரிப்க்கு 4000 ரூபாய் செலவாகும். எனினும், மாணவியிடம் நாள் ஒன்றுக்கு 18 ரூபாய் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது' என்றார்.
மேலும், மாணவி சான்ரா பேசுகையில், "எனக்கு நீர்வழிப் போக்குவரத்து துறையை நினைத்தால் பெருமையாக உள்ளது, என்னுடைய மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை" என்று நெகிழ்ந்துள்ளார்.
இச்சம்பவத்தை பல தரப்பு மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இத பண்ணா போதும்.. கொரோனா டெஸ்ட் பண்ண எப்படி வராங்கனு மட்டும் பாருங்க!".. 'மலேசியா' அறிவித்த 'அற்புத' சலுகை!
- தமிழகத்தில் கொரோனா ‘டெஸ்ட்’ செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை என்ன..? வெளியான தகவல்..!
- கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்திய பெண்...! 'உலகமே எங்க தடுப்பூசிக்காக எதிர்பார்த்துட்டு இருக்குது...' சூப்பர் மார்க்கெட்டில் பார்ட் டைம் வேலை பார்த்துட்டே படிச்சேன்...!
- தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் உச்சம் தொட்ட கொரோனா!.. ஒரே நாளில் 13 பேர் பலி!.. முழு விவரம் உள்ளே
- Video: 'ஒண்ணு' தான் ஷேர் பண்ணி சாப்பிடுங்க... 'பசியுடன்' இருந்த தொழிலாளர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டை... 'தூக்கி' வீசிய அதிகாரி!
- 'இறந்த' பெண்ணின்... 'இறுதிச்சடங்கில்' பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா... 'வழக்கு' பாய்ந்தது!
- 'முகக்கவசம்' கட்டாயம்... பின்படிக்கட்டுகள் 'வழியாக' மட்டுமே ஏற வேண்டும்... பேருந்து இயக்கத்திற்கான விதிமுறைகள் உள்ளே!
- சாதாரண இருமலும், தும்மலும் 'கொரோனா' பாதிப்பு அல்ல... அதன் 'காரணம்' இதுதான்: மருத்துவர்கள் விளக்கம்
- 'இந்த' 4 மாவட்டங்கள் தவிர்த்து... தமிழகம் முழுவதும் 'பேருந்துகள்' இயக்கப்படும்!
- 'ஜூன் 30' வரை... 'பொது முடக்கம்' நீட்டிப்பு... Unlock 1.0 வில் சில முக்கிய 'விதிகள்' உள்ளே!