"நிம்மதியே இல்ல".. முதல்வரை பாக்க வீட்டில் இருந்து தனியாக சென்ற மாணவன்.. கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்.!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

முதல்வரை பார்க்க வேண்டும் என கேரள மாணவர் ஒருவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளும், அதன் பின் நடந்த சம்பவமும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "மரணம் யார் எங்கள பிரிக்க..?" - கணவர் உயிரிழந்த பிறகு.. மனைவிக்கு நேர்ந்த துயரம்!! கலங்க வைத்த சம்பவம்..

கேரள மாநிலம், கோழிக்கோடு குற்றியாடி அருகேயுள்ள வேளம் என்னும் பகுதியை சேர்ந்தவர் தேவானந்த். 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டிற்கு வந்துள்ளார்.

முன்னதாக, தேவானந்த் தந்தை நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து கடன் வாங்கி இருந்ததாகவும் இதனை தவணை முறையில் கட்ட முடியாததால், குறிப்பிட்ட நிதி நிறுவனம் கடும் நெருக்கடியை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், தனது பெற்றோர்கள் வேதனையில் இருப்பதாகவும், தனக்கும் பெரிய அளவில் நிம்மதி இல்லாமல் தேவானந்த் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பெயரில், வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் அங்கிருந்து கிளம்பிய தேவானந்த், கோழிக்கோட்டில் இருந்து ரெயில் ஏறி திருவனந்தபுரம் வந்தடைந்து, முதல்வர் பினராயி விஜயனை பார்க்கவும் சென்றுள்ளார்.

அங்கே பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் முழு விவரத்தையும் தேவானந்த் கூறி உள்ளார். தொடர்ந்து, அவரை மியூசியம் காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார், உணவு வாங்கி கொடுத்து இது தொடர்பாக மேலும் விசாரித்துள்ளனர். இதன் பின்னர், மாணவன் தேவானந்த் தந்தைக்கு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். தொடர்ந்து, அவரும் திருவனந்தபுரம் வந்தடைந்துள்ளார்.

இது தொடர்பான விவரம் முதல்வர் பினராயி விஜயன் காதுக்கும் சென்றுள்ளது. மேலும், அந்த மாணவன் மற்றும் அவரது தந்தையை பார்க்க நேரம் ஒதுக்கினார் முதல்வர். தேவானந்தை சந்தித்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், தன்னைத் தேடி மாணவன் வந்ததற்கான காரணங்களை கேட்டறிந்து கொண்டார்.

கடனை அடைப்பதற்கு வழி காணலாம் என முதல்வர் கூறிய நிலையில், இனிமேல் பெற்றோரிடம் தெரிவிக்காமல், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் தேவானந்தை அறிவுறுத்தினார். இதன் பின்னர், தேவானந்த் மற்றும் அவரது தந்தை ஆகியோரை ரெயில் நிலையம் வரை போலீசார் கொண்டு போய், கோழிக்கோட்டிற்கு வழியனுப்பி வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read | "அந்த 1:30 மணி நேரம், TV, செல்போன்'னு எதையும் Use பண்ண கூடாது".. அதிரடி நடைமுறையை Follow பண்ணும் கிராமம்.. காரணம் இது தான்!!

KERALA, STUDENT, MEET CM, PINARAYI VIJAYAN, FINANCIAL ISSUES, FATHER FINANCIAL ISSUES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்