"ஸ்கூல் முடிஞ்சா நேரா அங்க தான்".. பள்ளி சீருடையில் தாய்க்கு உதவியாக கடலை வியாபாரம்.. மாணவியின் மனம் நெகிழ வைக்கும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபள்ளி சீருடை அணிந்து மாணவி ஒருவர் கடலை வியாபாரம் செய்து வருவது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வந்தது. இந்த நிலையில் இதன் பின்னணி என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பள்ளி மாணவி வினுஷா. 12 ஆம் வகுப்பு படித்து வரும் இவர், பள்ளி முடிந்த பிறகு அதன் அருகில் அமைந்துள்ள பகுதியில் தள்ளுவண்டி ஒன்றில் கடலை வியாபாரமும் செய்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த தொழிலை தனது தாயாரின் உதவிக்காக வினுஷா செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. கடந்த சில தினங்களாக வினுஷாவின் தாயார் உடல்நிலை சரியாக இல்லாததால் இவரும் இதனை கவனித்து வருகிறார்.
இது பற்றி பேசும் பள்ளி மாணவி வினுஷா, "வாடகை வீட்டில் தான் நாங்கள் வசித்து வருகிறோம். சகோதரியின் திருமணத்திற்கு பிறகு எங்களுக்கு கடன் ஏறிவிட்டதால் நெருக்கடி உருவானது. இதனால் அம்மாவிற்கு உதவி செய்வதற்காக இந்த பணியை செய்து வருகிறேன். தினம் தோறும் 500 ரூபாய் வரை கிடைக்கும். அதில் கடலை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கான பணம் சென்றால் மீதம் ஒரு 150 ரூபாய் கையில் இருக்கும்.
கடலை வியாபாரம் செய்வதை நினைத்து வெட்கப்பட எதுவுமில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக இதை செய்கிறேன். இதில் நான் வெட்கப்பட எதுவுமே இல்லை. சின்ன வயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்ற ஆசை. ஆனால் காமர்ஸ் குரூப் எடுத்துள்ளதால் எம்பிபிஎஸ் படிக்க முடியாது. இதனால் மருத்துவம் சார்ந்த வேறு துறையை தேர்ந்தெடுப்பேன்" என தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவி வினுஷா பள்ளிக்கூடத்திற்கு அருகிலேயே கடலை வியாபாரம் செய்து வருவது தொடர்பான விஷயம் தற்போது அதிகம் வைரலாகி வந்த நிலையில், ஆலப்புழா மாவட்ட கலெக்டர் கிருஷ்ண தேஜாவுக்கும் இந்த தகவல் போய் சேர்ந்துள்ளது. மேலும் வேலையில் இனிமேல் கவனம் செலுத்தாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மாணவி வினுஷாவுக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
அதே போல, மாணவியின் படிப்பு செலவுக்காக உதவிகள் செய்து கொடுப்பதாகவும் ஆட்சியர் கிருஷ்ண தேஜா உறுதி அளித்துள்ளார். பள்ளி மாணவியாக இருந்த போதிலும், சிறு வயதிலேயே இப்படி குடும்ப சூழ்நிலையை உணர்ந்து செயல்பட்டு வரும் மாணவியின் செயல், பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என் செல்லங்களா நல்லா சாப்பிடுங்க".. குழந்தைகளுக்கு ஆசை ஆசையாய் உணவு பரிமாறிய GP முத்து.. வைரலாகும் வீடியோ..!
- லாட்டரியில் ₹ 248 கோடி ஜெயிச்ச நபர்.. குடும்பத்துக்கு தெரிய கூடாதுன்னு எடுத்த முடிவு.. வைரல் சம்பவம்
- 32 வயசு வித்தியாசம்.. கல்யாணம்னு ஒன்னு நடந்தா அவருகூட தான்.. ஆசிரியரை காதலித்து கரம்பிடித்த கல்லூரி மாணவி..!
- அது எங்கள ஒன்னும் செய்யாது.. வீட்டுக்குள்ள பாம்புக்கு கோவில்.. மிரள வைக்கும் குடும்பம்.. ரொம்ப வருஷமாவே இப்படித்தானாம்..!
- உக்ரைனில் இருந்து வந்த பெண்ணுடன் காதல்.. மனைவியை தவிக்க விட்டு வெளியேறிய கணவர்.. "4 மாசத்துல அப்படியே தலை கீழ ஆயிடுச்சு"
- "நிம்மதியே இல்ல".. முதல்வரை பாக்க வீட்டில் இருந்து தனியாக சென்ற மாணவன்.. கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்.!!!
- "எங்க மக இன்னும் சாகல".. இறந்தும் 9 பேர் உயிரை காத்த மாணவி.. மனதை ரணமாக்கும் சோகம்.. உருக்க பின்னணி!!
- 43 வருசமா அப்பா கல்லறைக்கு போய் வரும் மகள்.. "இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே".. குடும்பத்தையே சுக்கு நூறாக்கிய உண்மை
- 6 பேர் உயிரைக் காப்பாற்றிய 'Alexa'.. நள்ளிரவில் கொடுத்த எச்சரிக்கை.. அப்படி என்ன செஞ்சுது?
- "Promotion கிடைக்காம போனதுக்கா இப்டி பண்ணாரு".. 8 வருசத்துக்கு முன்னாடி நடந்த பயங்கரம்.. DNA'வால் சிக்கிய நபர்!!