'வீட்ல எலி தொல்ல ஜாஸ்தியா இருக்கு!'.. பாம்புக் கடியால் இளம்பெண்ணை கொலை செய்த வழக்கு!.. பாம்பு பிடிப்பவர் பகிரங்க வாக்குமூலம்!.. பதறவைக்கும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் உத்ராவை அவரது கணவர் சூரஜ் பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 2018-ம் ஆண்டு உத்ராவுக்கும் சூரஜுக்கும் திருமணம் நடந்தது. அதன்பிறகு அவர்களுக்கு ஒரு வயதில் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், கடந்த மார்ச் 2-ம் தேதி அணலி பாம்பு கடித்த நிலையில் உயிர்தப்பினார் உத்ரா. அவரது அம்மா வீட்டில் மருத்துவ சிகிச்சையில் இருந்த சமயத்தில் சூரஜ் பாட்டிலில் எடுத்து வந்த கருமூர்க்கன் (கருநாகம்) பாம்பை விட்டு உத்ராவைக் கடிக்க வைத்து கொலை செய்துள்ளார். சூரஜின் செல்போனை சோதனை செய்ததில் பாம்பு பிடிக்கும் சுரேஷ் என்பவருடன் அவர் அடிக்கடி பேசியது தெரியவந்ததால் போலீசிடம் வசமாகச் சிக்கினார்.
மேலும், சூரஜ் பாம்பு கொண்டு சென்ற பிளாஸ்டிக் பாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்ராவை கடித்த பாம்பை அப்போது உறவினர்கள் அடித்துக் கொன்றார்கள். அந்தப் பாம்பும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாம்பு பிடிக்கும் சுரேஷ் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்லுவாதக்கல்லைச் சேர்ந்த சுரேஷ் பாம்பு பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டவர் அல்ல. ஸ்கூல் வேன் டிரைவராகப் பணிபுரிந்து வந்துள்ளார். 2017-ம் ஆண்டு முதல் அவர் பாம்பு பிடிப்பது குறித்தும், பாம்பைப் பிடித்தால் அது கடிக்காமல் இருப்பதற்காக எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும் யூடியூப் இணையதளத்தைப் பார்த்து கற்றுக்கொண்டார். பாம்பு பிடித்தல், பாம்பைக் கையில் வைத்துக்கொண்டு மக்களுக்கு வேடிக்கை காட்டுவது ஆகியவற்றை வீடியோவாக யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் பேஜில் பதிவேற்றம் செய்துள்ளார்.
சுரேஷின் இந்தப் பதிவுகளைப் பார்த்துதான் சூரஜ் அவரை போனில் தொடர்புகொண்டுள்ளார். வீட்டில் எலித்தொல்லை இருப்பதால் எலி பிடிக்க ஒரு பாம்பு வேண்டும் என சூரஜ் கேட்டுள்ளார். அப்போது சுரேஷ் தன்னிடம் இருந்த அணலி வகை பாம்பை சூரஜின் வீட்டுக்குக் கொண்டுவந்தார். எலி பிடிக்க பாம்பை எப்படி கையாள வேண்டும் என்பதை சுரேஷ் சொல்லிக்கொடுத்தார். பின்னர் பாம்பை மறுநாள் வந்து வாங்கிக்கொள்வதாகக் கூறிவிட்டு சுரேஷ் சென்றார். அப்போது சூரஜ் அந்தப் பாம்பைக் கொண்டு ஒரு எலியைக் கடிக்க வைத்துள்ளார். எலி இறந்ததால் பாம்பு விஷத்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்துகொண்டார்.
மறுநாள் சுரேஷ் பாம்பை திருப்பிக் கேட்டதற்கு அது தப்பி ஓடிவிட்டது என சமாளித்துள்ளார் சூரஜ். அந்தப் பாம்பைக் கொண்டுதான் மார்ச் 2-ம் தேதி உத்ராவைக் கடிக்க வைத்துள்ளார். அப்போது மருத்துவமனைக்குக் கொண்டுசென்றதால் அவர் உயிர்தப்பிவிட்டார்.
பின்னர், இரண்டு மாதத்திற்குப் பிறகு சுரேஷை அழைத்த சூரஜ், தங்கள் விவசாய நிலத்தில் எலித்தொல்லை இருப்பதாகவும் அதற்காக அதிக விஷம் கொண்ட கருமூர்க்கன் பாம்பு வேண்டும் எனவும் கேட்டுள்ளார். சுரேஷ் அடூர் பகுதிக்கு காரில் பாம்பைக் கொண்டுவந்துள்ளார். அங்கு சென்ற சூரஜ் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து பாம்பை விலைக்கு வாங்கியுள்ளார். அதன்பிறகு சூரஜின் மனைவி உத்ரா பாம்பு கடித்து இறந்த செய்தியை சுரேஷ் பத்திரிகைகளில் பார்த்தார். அடித்துக் கொல்லப்பட்ட அந்தப் பாம்பின் புகைப்படத்தைக் கண்ட சுரேசுக்கு அது தான் கொடுத்த கருமூர்க்கன் வகை பாம்பு என்பதும் புரிந்தது.
இதனால் பதற்றமடைந்த சுரேஷ் இதுகுறித்து குடும்பத்தினரிடம் புலம்பியுள்ளார். இதுபற்றி போலீஸில் கூறிவிடுங்கள் என சுரேஷின் மகன் சனல் சொல்லியிருக்கிறார். போலீஸிடம் சென்றால் இந்தக் கொலைப்பழி தன்மீது விழுந்துவிடும் என்பதால், அப்போதைக்கு அமைதியாக இருந்துவிட்டார். ஆனாலும், போலீஸ் விசாரணையில் சிக்கிக்கொண்டார். கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது சட்ட விரோதமாக பாம்பை வைத்திருந்தது, அதைப் பணத்துக்காக விற்பனை செய்தது குறித்து வனத்துறையினரும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அரியவகை பாம்பான கருமூர்க்கன் (கருநாகம்) எப்படி சுரேஷுக்குக் கிடைத்தது என்பது பற்றிய விசாரணையும் நடந்து வருகிறது. பாம்பு பிடிப்பதில் ஆர்வம் கொண்ட சுரேஷ் கடைசியில் தான் பிடித்த பாம்பால் சிறையில் சிக்கிக்கொண்டார்.
மற்ற செய்திகள்
கொரோனா சிகிச்சை பிரிவில் பயங்கர தீ விபத்து!.. 5 பேர் பலி!.. நெஞ்சை நொறுக்கும் சோகம்!.. என்ன நடந்தது?
தொடர்புடைய செய்திகள்
- 'ஏமாத்தி உள்ள வந்துடலாம்னு நினைக்காதீங்க!'.. வெளி மாநிலத்தவருக்கு பினராயி விஜயன் கடும் எச்சரிக்கை!.. கேரளாவில் திடீரென கொரோனா எகிறியது எப்படி?
- 2-வது முறையாக 'கடித்த' விஷப்பாம்பை... தோண்டி எடுத்து 'பிரேத' பரிசோதனை... என்ன காரணம்?
- 'நீ 35 வயசுக்காரன காதலிப்ப, நான் ஓகே சொல்லணுமா'?... 'அசந்து தூங்கிய செல்ல மகள்'... நடு ராத்திரி நடந்த படு பாதக சம்பவம்!
- சொன்ன 'பேச்சு' கேட்க மாட்டிங்களா?... 'செங்கல்லால்' கொடூரமாக தாக்கிய தந்தை... சிறுமிகளுக்கு நேர்ந்த 'பரிதாப' முடிவு!
- 'மச்சி யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது'... 'ஒரிஜினல் ஆக்சிடென்ட் போல இருக்கணும்'... இளைஞர்களின் பதறவைக்கும் ஸ்கெட்ச்!
- 3 குழந்தைகளுக்கு தாயான... 35 வயது காதலியை... நடு ரோட்டில் வைத்து காதலன் செய்த கொடூரச் செயல்!.. பதபதைக்கு வைக்கும் கோரம்!
- ‘மோரில் தூக்கமாத்திரை’.. ஓடும் ரயிலில் பெண்ணை தள்ளி கொலை.. அதை மறைக்க 9 கொலை.. அடுத்தடுத்து ‘பகீர்’ கிளப்பிய நபர்..!
- "அப்பா செல்போன்ல ஆபாசப்படம் பாப்பாரு! அவர் இல்லாதப்போ".. 'திருச்சி' சிறுமிக்கு 'பாலியல் தொல்லை' கொடுத்து 'கொன்ற' சிறுவன் 'பகீர்'!
- தூங்கிக் கொண்டிருந்த 'மகளை'... சுத்தியலால் 'கொடூரமாக' தாக்கிய 'தந்தை'... ஏன் இப்படி? குழம்பிப்போன 'போலீஸ்'!
- உயிருக்கு 'போராடிய' 9 வயது சிறுமி... காப்பாத்துங்க என 'கதறிய' 14 வயது சிறுவன்... கொலையாளியை பார்த்து 'ஸ்டன்னாகி' போன போலீஸ்!