'வாடிக்கையாளர்களுக்கு கொரோனா வந்துச்சுன்னா ரூ.50,000 பரிசு...' 'அலையலையாக திரண்ட மக்கள்...' - சர்ச்சை விளம்பரத்தை வெளிட்ட கடை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடையில் பொருட்கள் வாங்கியவர்களுக்கு கொரோனா வந்தால் ரூ.50,000 பரிசு என கேரளாவின் ஒரு கடையில் அளிக்கப்பட்ட விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டாலும் குறு சிறு வியாபாரிகள் முதல் பெரிய தகவல் தொழில் நுட்ப துறையினர் வரை பாதிப்படைந்து தான் வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் இயங்கும் ஒரு மின்னணு பொருட்கள் விற்பனை கடையில் வெளியிடப்பட்ட விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கால் சரிவை சந்தித்த விற்பனைகள் களைகட்ட ஒரு மின்னணு பொருட்கள் விற்பனை கடை உரிமையாளர் தங்கள் கடையில் ஷாப்பிங் செய்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டால் ரூ.50,000 பரிசு என விளம்பரம் அளித்துள்ளார்.
இந்த விளம்பரம் வைரலாகி அக்கடைக்கு மக்கள் வெள்ளமென திரண்டு, பொருட்கள் விற்பனையும் அள்ளியது. இந்த சம்பவம் குறித்து அறிந்த கோட்டயத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி, இம்மாதிரியான நடவடிக்கைகள் கொரோனா மேலும் பரவ சந்தர்ப்பமாக அமையும் எனவும் இந்த சலுகை சட்டவிரோதமானது மற்றும் தண்டனைக்குரியது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
கடிதம் குறித்து அறிந்த கேரள முதல்வர் காவல் துறையினரை முடுக்கி சம்பந்தப்பட்ட கடை மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் சர்ச்சை விளம்பரம் அளித்த கடையை மூடி, உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா பாசிட்டிவ் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளித்து சென்னை MIOT மருத்துவமனை சாதனை!
- VIDEO: கொரோனா வார்டில்.. குடும்பமே சேர்ந்து போட்ட குத்தாட்டம்!.. ‘நடந்தது இதுதான்’!.. வைரல் ஆகும் வீடியோ!
- 'சரியா இன்கிரிமெண்ட் போடுற நேரத்தில் வந்த கொரோனா'... 'ஜூலையில் வேலை பறிபோனவர்கள்'... 'அதிலும் இந்த சம்பளத்தில் இருப்பவர்கள்'... வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- 'இதுவும் ஒரு நல்ல விஷயம் தான்'... 'வேகமாக பரவும் புதிய வைரஸ் குறித்து'... 'வெளியாகியுள்ள ஆறுதல் தகவல்!'...
- தமிழகத்தில் 6,000ஐக் கடந்த பலி எண்ணிக்கை!! இன்றைய கொரோனா பாதிப்பு - முழு விபரம்!
- 'நான் பவர் பேங்க் தான் ஆர்டர் பண்ணினேன்...' 'ஆனா வந்தது அது இல்ல...' - டேக் செய்து போஸ்ட் போட்டவருக்கு அமேசான் கொடுத்த 'வாவ்' ரிப்ளை...!
- அமெரிக்காவில் இருந்து ஆசையாய் வந்த கணவர்.. கேட்டையே திறக்காத மனைவி, பிள்ளைகள்.. இதுவரை நடந்ததுலயே கொரோனா பயத்தின் உச்சம் இதுதான்.. கடைசியில் கணவர் எடுத்த முடிவு!
- 'தூங்க போலாம்ன்னு ரெடியான குடும்பம்'... 'சோஃபா அடியில் ஹாயாக படுத்திருந்த 14 அடி ராஜநாகம்'... பரபரப்பு சம்பவம்!
- தளர்வு அறிவித்த 'ஒரே நாளில்' அப்ளை பண்ணிய 1.2 லட்சம் பேருக்கு 'இ-பாஸ்!'.. 'மகிழ்ச்சியில்' திளைத்த விண்ணப்பதாரர்கள்!
- 'தடுப்பு மருந்து வேணும்னு ஆசைப்பட்டா மட்டும் போதுமா!? 'இது' இல்லாம இனி எங்களால அடுத்த அடி எடுத்து வைக்க முடியாது!'.. சீரம் நிறுவனம் பரபரப்பு கருத்து!