"என்ன வந்தாலும் 'படிப்ப' மட்டும் விட்டுடாத"... வீட்டின் 'மேற்கூரையில்' இருந்து படித்த 'மாணவி'... கிடைத்த 'உதவி'... குவியும் 'பாராட்டுக்கள்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் கோட்டக்கலை அடுத்த அரீக்கல் என்னும் பகுதியை சேர்ந்தவர் நமீதா நாராயணன். இவர் இறுதியாண்டு BA ஆங்கிலம் படித்து வரும் நிலையில் ஊரடங்கின் காரணமாக ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுத்து தனது பாடங்களை கற்று வருகிறார்.
ஆனால் இவர் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்க தேர்வு செய்த இடம் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வீட்டில் எங்கும் சிக்னல் கிடைக்காத நிலையில் வீட்டின் மேற்கூரையில் சில மணி நேரம் உட்கார்ந்து கற்று வந்துள்ளார். வீட்டின் பல பகுதிகளில், எங்கும் சிக்னல் கிடைக்காத நிலையில், வீட்டின் மேற்கூரையை நமீதா தேர்வு செய்துள்ளார். 'எனது வீட்டின் அனைத்து பகுதிகளிலும் உட்கார்ந்து படித்தேன்,. ஆனால் எங்கும் சிக்னல் சரிவர கிடைக்கவில்லை. அதனால் வீட்டின் மேற்கூரையை தேர்வு செய்தேன்' என அவர் தெரிவித்தார்.
இந்த தகவல் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, தனியார் இன்டர்நெட் சேவை நிறுவனம் ஒன்று நமிதாவின் வீட்டிற்கு சென்று அவருக்கு அதிவேக இன்டர்நெட் சேவையை வீட்டிற்குள்ளேயே கிடைக்கும் படி உதவி செய்து கொடுத்தது. இதனையடுத்து, அந்த மாணவி மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். மேலும் இதே போல பல மாணவ, மாணவிகள் இன்டர்நெட் சேவை சரிவர கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் நமீதா தெரிவித்தார்.
பல தடைகளை தாண்டி கல்வி கற்க எண்ணிய அந்த மாணவிக்கு அப்பகுதி எம்.எல்.ஏ மற்றும் எம்.பி ஆகியோர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். ஆன்லைன் வகுப்புகளில் கற்றுக் கொள்ள தனது முன்பிருந்த தடைகள் அனைத்தையும் தாண்டி கல்வி கற்க வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்ட கல்லூரி மாணவிக்கு பொது மக்கள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ஒரு ஆளை பிடிச்சாச்சு..." "இன்னும் ரெண்டு பேரு இருக்காங்க..." 'யானைக்கு' நியாயம் 'கிடைத்தே தீரும்...'
- ‘வாயில் காயம்’!.. ஒரு மாசத்துக்கு முன் இதேபோல் இறந்த ‘பெண்யானை’.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
- கர்ப்பிணி யானை மட்டுமில்ல ‘இந்த’ விலங்கும் வெடியாலதான் இறந்திருக்கு.. போட்டோ வெளியிட்ட ஐஎஃப்எஸ் அதிகாரி..!
- ‘3 பேர் அடையாளம் தெரிஞ்சிருக்கு’!.. நாட்டை உலுக்கிய ‘கர்ப்பிணி யானை’ விவகாரம்.. கேரள முதல்வர் புது தகவல்..!
- 'யானையை' கொன்றவர்களை 'ஊரே தேடுகிறது...' 'துப்பு கொடுத்தால்' 'ரூ.1 லட்சம்' பரிசு... 'தனியார் நிறுவனம் அறிவிப்பு...'
- "இது நமது கலாச்சாரமே இல்லை..." 'காரணமானவர்களை சும்மா விடமாட்டோம்...' 'மத்திய அரசு' மிக தீவிரமான ஒன்றாக இதை 'கையில் எடுத்துள்ளது...'
- 'இந்தியாவையே அதிரவைத்த கர்ப்பிணி யானையின் கொடூர மரணம்'... 'என்னதான் நடந்தது'?... பரபரப்பை கிளப்பியுள்ள புதிய தகவல்!
- ‘கர்ப்பிணி யானை கொலை...' "குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை?..." 'பினராயி விஜயன் விளக்கம்...'
- "விஷமிகள் சிலர் கொடுத்ததை.. நம்பி உண்ட யானை.. வெடித்துச் சிதறிய அன்னாசிப்பழம்".. "அவளின் சிசுவைக் கையில் ஏந்தும்போது" நொறுங்கிப் போன பிரேத பரிசோதனை மருத்துவர்!
- 'படிப்புல ரொம்ப கெட்டிக்காரி... அவசர பட்டுடியே தங்கம்!'.. ஆன்லைன் வகுப்பை பார்க்க முடியாத விரக்தியில்... மாணவி எடுத்த 'மனதை' சிதறடித்த முடிவு!