இந்தியாவுலயே இப்படி ஒரு கோவிலை யாரும் கட்டுனதில்ல.. நாட்டையே திரும்பிப் பார்க்க வச்ச ஓய்வுபெற்ற ஆசிரியர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவுலயே இப்படி ஒரு கோவிலை யாரும் கட்டுனதில்ல.. நாட்டையே திரும்பிப் பார்க்க வச்ச ஓய்வுபெற்ற ஆசிரியர்..!

Advertising
>
Advertising

Also Read | "மொத்தமா 5000-க்கும் மேல.." பூட்டிய வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த போலீஸ்.. உள்ள என்ன தான் இருக்குன்னு பாத்தப்போ காத்திருந்த அதிர்ச்சி

கேரளாவை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் இந்திய அரசிலமைப்பு சட்டத்திற்கு என தனியாக கோவில் ஒன்றையே கட்டியுள்ளார். இது பலரையும் வியப்படைய செய்திருக்கிறது.

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சிவதாசன் பிள்ளை. 71 வயதான இவர் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்திய அரசியலமைப்பின் மீது தீராத காதல் கொண்டவரான சிவதாசன் தனது வீட்டின் ஒரு பகுதியில் இந்திய அரசியலமைப்புக்கு என கோவில் ஒன்றை கட்டியுள்ளார். இங்கே இவரது மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்த கோவில் கட்டுமானம் குறித்து இவர் சொல்லும் காரணம் தான் பலரையும் திகைப்படைய வைத்திருக்கிறது.

அரசியலைப்பு தான் என் கடவுள்

இதுபற்றி பேசிய சிவதாசன்,"என்னைப் பொறுத்தவரை, என் இறைவன் அரசியலமைப்பு தான். நான் அதை வணங்குகிறேன். இதுவே நமது நாட்டின் அடிப்படை, நமது சகோதரத்துவம், பன்முகத்தன்மை மற்றும் எதிர்காலம். நான் என் கடவுளின் கொள்கைகளை வளர்க்க விரும்புகிறேன், அதனால் நான் அதற்கென கோவில் ஒன்றை உருவாக்கினேன்" என்றார்.

3 சென்ட்களை கொண்ட தனது வீட்டில், இந்த கோவிலுக்கு என தனியாக ஒரு குடிலை உருவாக்கியுள்ள சிவதாசன் இதனுள் மஹாத்மா காந்தி, சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர், விவேகானந்தர், நோபல் பரிசுபெற்ற மலாலா ஆகியோரின் புகைப்படங்களை வைத்திருக்கிறார். அரசியலமைப்பின் முகவுரை இந்த கோவிலின் சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு “பரணகதனா ஸ்கேத்திரம் (அரசியலமைப்புக் கோயில்) எனவும் பெயர் சூட்டியுள்ளார்.

பிரசாதம்

தினந்தோறும் ஏராளமான மக்கள் மற்றும் மாணவர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கிறார்கள். இவர்களுக்கு பிரசாதம் ஒன்றையும் அளிக்கிறார் சிவதாசன். அதில், "அரசியலமைப்பு ஆண்டவர், அது இந்த வீட்டின் செழிப்பு" என்று எழுதப்பட்டிருக்கிறது. கோவிலுக்கு வரும் மக்கள்," பிற கோவில்கள் போலவே இதற்குள் பிராகாசமான எண்ணெய் விளக்குகள் வைக்கப்பட்டுள்ளன. இது தெய்வீக இடமாக இருக்கிறது" என்கிறார்கள்.

இதுபற்றி பேசிய சிவதாசன்,"புதிய தலைமுறையினருக்கு நமது அரசியல் சாசனம் பற்றி தெரியாது. அவர்களுக்கு சுதந்திர தினம் அல்லது குடியரசு தினம் என்பது வெறும் விடுமுறை விடப்படும் தினங்கள். அரசியலமைப்பு குறித்த உணர்வைப் புகுத்தி அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதே எனது லட்சியம். நாம் இறைவனை (அரசியலமைப்பை) நிலைநிறுத்தினால், நாட்டில் எந்தவிதமான சச்சரவுகளும், பிரச்சனைகளும் இருக்க முடியாது என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன்" என்றார்.

கேரளாவில், இந்திய அரசியமைப்புக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் கோவில் கட்டியது பலரையும் வியப்படைய செய்துள்ளது.

Also Read | "அட, இவரு என்னப்பா இங்க??.." தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இளம் இந்திய வீரர்.. வைரலாகும் புகைப்படம்

KERALA, RETIRED TEACHER, BUILDS TEMPLE, INDIAN CONSTITUTION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்