மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியானது.. சுகாதார அமைச்சகம் வெளியிட்ட பரபரப்பான அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்திருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | Take Off ஆன 15 நிமிஷத்துல விமானிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு.. இறுதி நேரத்திலும் அவர் எடுத்த முடிவு.. கவலையில் மூழ்கிய விமான நிலையம்..!

குரங்கு அம்மை

வைரஸ் தாக்குதலால் ஏற்படும் அரியவகை நோய் தான் இந்த குரங்கு அம்மை. இதில் மொத்தம் இரண்டு வகை மரபணுக்களை கொண்ட வைரஸ்கள் இருக்கின்றன. முதலாவது பிரிவைச் சேர்ந்த வைரஸ், மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும் இரண்டாவது வகை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் கண்டறியப்பட்டது.

குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் ஆகியவை ஏற்படலாம். மேலும், இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்பளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

சிகிச்சை

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர் கடந்த 6 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். இவர் தற்போது மஞ்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் நெருக்கமாக இருந்தவர்களை கண்காணித்து வருவதாக கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்திருக்கிறார். மேலும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 வது பாதிப்பு

முன்னதாக கடந்த 12 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த பயணி ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு வந்த இப்பயணியை பரிசோதிக்கும் போது அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதுடன் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

இதைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையத்துக்கு வந்த பயணி ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சுகாதரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அவர் கண்ணூரில் உள்ள பரியாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கேரளாவில் இன்று ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாகியிருப்பதன் மூலமாக, இந்தியாவில் குரங்கு அம்மையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்திருக்கிறது.

Also Read | கள்ளக்குறிச்சி: "மாணவியின் உடலை நாளை வாங்கிக்கொள்கிறோம்"..கோர்ட்டில் சம்மதம் தெரிவித்த பெற்றோர்.. முழுவிபரம்..!

KERALA, MONKEYPOX, MONKEYPOX CASE, குரங்கு அம்மை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்