'கேரளாவில் பயமுறுத்தும் எண்ணிக்கை'... 'கையை மீறி செல்கிறதா'?... புதிய கட்டுப்பாடுகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தொற்றை கட்டுப்படுத்தக் கேரளா அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் இன்னும் முடியாத நிலையில் கேரளாவில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கேரளாவைப் பொறுத்தவரை கொரோனா தொற்றை கட்டுப்படுத்தக் கேரளா அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன.
கடந்த மாதம் 27ம் தேதி முதல் தற்போது ஆகஸ்ட் 1ம் தேதி வரை ஆறுநாட்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 20,000-த்தை தாண்டியிருக்கிறது. நேற்று 1.90 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில் 23,676 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழுவை நியமித்திருந்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் சுகாதாரத்துறை மற்றும் உயர் அதிகாரிகள், அமைச்சர்களுடன் கேரள முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, நாளை முதல் காலை ஏழு மணி முதல் இரவு 9மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இப்படியே போனா சரிப்பட்டு வராது’.. வேகமாக அதிகரிக்கும் கொரோனா பரவல்.. கேரள அரசு அதிரடி நடவடிக்கை..!
- 'என்ன ஆச்சு நம்ம சென்னைக்கு'... 'இந்த மண்டலங்களின் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா'... பின்னணி காரணம்!
- 'இப்படி இருந்தா எப்படி'?... 'இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை'... மத்திய அரசு கடும் எச்சரிக்கை!
- ‘என்னது மறுபடியும் மொதல்ல இருந்தா..!’.. ஒரு வருசம் கழிச்சு வூகானில் வேகமாக பரவும் கொரோனா.. சீனா எடுத்த அதிரடி முடிவு..!
- 'கேரளாவில் அதிகரிக்கும் தொற்று'... 'கோவைக்கு வர கடும் கட்டுப்பாடுகள் அமல்'... அதிரடி மாற்றங்கள்!
- கேரளாவை தொடர்ந்து ‘மற்றொரு’ மாநிலத்தில் பரவிய ஜிகா வைரஸ்.. உடனே சுகாதார குழுவை அனுப்பிய மத்திய அரசு..!
- 'என்ன யாருன்னு தெரியுதா'?... 'கதவை திறந்ததும் ஒரு நிமிடம் ஆடிப்போன தாய்'... 45 வருடம் கழித்து நடந்த ஆச்சரியம்!
- இந்த 'வேலை'லாம் நமக்கு சரிபட்டு வராது...! 'வேலையை ராஜினாமா பண்ணிட்டு...' 'தம்பதியினர் போட்ட மாஸ்டர் பிளான்...' - ஆஹா... இது அல்லவா சுக வாழ்வு...!
- 'சின்னமையைப் போல அதிவேகமாக பரவும் 'டெல்டா வகை' கொரோனா'!.. லீக்கான அமெரிக்காவின் சீக்ரெட் ரிப்போர்ட்!.. நடுங்கவைக்கும் பின்னணி!
- ஹேய் கொரோனா...! 'வாக்சின் போட்டும் மூணு தடவ வந்துட்ட...' 'நாலாவது தடவலாம் உன்ன வர விடமாட்டேன்...' - நம்பிக்கையுடன் கூறிய டாக்டர்...!