“இதெல்லாம் வெளியில சொல்லலாமா? மக்கள் எப்படி வருவாங்க?”.. மருத்துவமனையின் கேள்விக்கு அனல் பறக்கும் பதில்! பெண் மருத்துவருக்கு பெருகும் ஆதரவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இத்தாலியில் இருந்து கொச்சி திரும்பிய ஒரு குடும்பத்தினர், கொரோனா பரிசோதனை செய்துகொள்ளாமல் வீட்டுக்குச் சென்றதால் அவர்களின் குடும்பத்திலேயே 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்ததும், தெரியவந்ததை அடுத்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா நேற்றைய தினம் கோபமாக பேசியுள்ளார்.  தற்போது 12 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருச்சூர் மாவட்டத்தில் தளிக்குளம் தனியார் மருத்துவமனையில் வேலைபார்த்து வந்த ஷினு சியாமளன் என்கிற பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் இரு லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.   அதில், “கத்தாரில் இருந்து திரும்பிய நபர் மருத்துவமனைக்கு அதிக காய்ச்சலுடன் வந்திருந்தார். அவருக்கு காய்ச்சல் அதிக டெம்ப்ரேச்சரில் இருந்த நிலையிலும் தனது பயண விபரங்களை அரசுக்கும் சுகாதாரத்துறைக்கும் தெரிவிக்கவில்லை. அவருக்கு கொரோனா பற்றி நான் எடுத்துக்கூறியும், அவர் கத்தாருக்கு செல்ல வேண்டுமென்று கூறி மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.

அதன் பின்னும் அந்த நபரின் வண்டி எண் மூலம் அவரைத் தேடினேன். ஆனால் அவர் கத்தாருக்குச் சென்றதும், கத்தார் விமான நிலையத்தில் அவரை பரிசோதித்தவர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பதும் தெரியவந்தது. இதைத்தான் நான் இங்கு செய்யச் சொன்னேன். பொதுமக்கள் இப்படி செய்யலாமா? அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் அல்லவா?” என்று அப்பெண் பேசியிருந்தார். ஆனால் ஷினுவின் இப்பதிவை நீக்கச் சொன்ன அவரது மருத்துவமனை நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்துவிட்டதாகவும், கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால் மக்கள் கிளீனிக்குக்கு வருவதை நிறுத்திவிடுவார்கள் என்பதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி பேசிய ஷினு, தான் தன் கடமையைத்தான் செய்ததாகவும், தொடர்ந்து அதையே செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.

KERALA, CORONAVIRUSINDIA, COVID19

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்