"ஒரு உயிர் வரபோற நேரத்துல".. கர்ப்பிணி பெண், கணவர் பயணித்த காரில்.. திடீரென நடந்த அசம்பாவிதம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தின் குட்டியாட்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரிஜித். இவரது மனைவி பெயர் ரீஷா. மேலும் ரீஷா நிறைமாத கர்ப்பிணியாகவும் இருந்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
இதனிடையே, சமீபத்தில் ரீஷாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, தனது உறவினர்கள் சிலரை அழைத்துக் கொண்டு காரில் மருத்துவமனைக்கும் சென்றுள்ளார் பிரிஜித்.
இந்த நிலையில், காரில் இருந்தவர்கள் யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று அரங்கேறி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.
திடீரென பிரிஜித் மற்றும் ரீஷா உள்ளிட்ட குடும்பத்தினர் சென்ற கார், தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காரில் இருந்தவர்களை காப்பாற்ற முயன்றுள்ளனர். மறுப்பக்கம், கார் முன் பக்கம் தீப்பிடித்து எரியவும் தொடங்கி உள்ளது. இதனிடையே, கார் தீப்பிடித்ததற்கு மத்தியில் முன்பக்க கதவை திறக்க முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும், முன் பக்கம் முழுவதும் தீப்பிடித்ததன் காரணத்தினால் பிரிஜித் மற்றும் ரீஷா ஆகியோர் தீயில் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பின்னால் அமர்ந்திருந்த நான்கு பேர் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்துக் கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கும் நிலையில், தற்போது மருத்துவமனையிலும் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அறிந்து வந்த போலீசார் பிரிஜித் மற்றும் ரீஷா ஆகிய இருவரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
காரில் எப்படி தீ உருவானது என்பது பற்றிய சரியான காரணங்கள் தெரியாத சூழலில், இந்த விபத்திற்கான காரணம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கர்ப்பிணி பெண், பிரசவ வலியால் துடித்து மருத்துவமனை சென்ற சமயத்தில் கார் தீப்பிடித்து உயிரிழந்த சம்பவம், பலரையும் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.
மற்ற செய்திகள்
"இது தந்தையின் தாலாட்டு".. ட்ரெக்கிங்கில் மகளுடன் நீரில் விளையாடிய விராட்.. வைரலாகும் அனுஷ்கா Post!!
தொடர்புடைய செய்திகள்
- "நான் உயிரோட தான் இருக்கேன்".. இறந்த கணவரை உணவகத்தில் பார்த்ததாக பெண் சொன்ன விவகாரத்தில் பரபரப்பு ட்விஸ்ட்..
- "எனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு".. மளிகைக் கடை வருமானத்தை வச்சு சாதித்து காட்டிய சிங்கப் பெண்.. ஆச்சரியத்தில் இணையவாசிகள்..!
- "25 கோடி ரூபா லாட்டரில ஜெயிச்ச ஆள ஞாபகம் இருக்கா?".. லேட்டஸ்ட்டா வெளியான தகவல்.. "பம்பர் பரிசு அடிச்சா கவனமா இருங்கப்பா"
- கைவிட்ட கணவன்.. வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலை.. எக்குத்தப்பா அடிச்ச அதிர்ஷ்டம்.. கோடீஸ்வரி..!
- குழந்தைக்கு பெயர் தேடிய போது.. கணவர் பற்றி தெரிய வந்த அதிர்ச்சி கலந்த உண்மை!!.. "இது தெரியாம கல்யாணமும் நடந்துடுச்சே"
- "என்ன மன்னிச்சுக்கோ".. விமான விபத்துக்கு முன் மனைவிக்கு கணவர் அனுப்பிய கடைசி மெசேஜ்!!.. மனம் நொறுங்கும் பின்னணி!!
- "விடிஞ்சா கல்யாணம்".. பல கனவுகளை மனசுல சுமந்துட்டு சிரிச்ச முகத்தோட நின்ன பொண்ணு.. திடீர்ன்னு நடந்த சோகம்!!
- "அம்மா போய்ட்டா".. குழந்தைகளை ஏமாற்றி வந்த தந்தை.. ஒன்றரை வருடம் கழித்து தெரியவந்த திடுக்கிடும் உண்மை!!
- "மகளை பத்தியாச்சும் கொஞ்சம் நெனச்சு இருக்கலாம்".. வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பியதும் குடும்பத்துடன் நபர் எடுத்த விபரீத முடிவு!
- அன்று பீடி சுற்றும் வேலை செயத கூலி தொழிலாளி.. இன்று அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதி! யார் இந்த சுரேந்தர் K பாட்டேல்?