'பசியில் வாடிய முதியவருடன் தன் உணவுப் பொட்டலத்தை பகிர்ந்துகொண்ட காவலர்'.. கலங்கவைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர், காவலர்கள் அரங்கில் பசியுடன் நின்றுகொண்டிருந்த முதியவருக்கு தனது உணவை பகிர்ந்து, தானும் உண்ட சம்பவம் நெகிழவைத்துள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் ஆங்காங்கே குடியுரிமை சட்ட மசோதா தொடர்பான வன்முறைகள் வெடிப்பதால், அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் அம்மாநில காவல்துறையினர் நிற்கவும், உணவுண்ணவும் நேரமின்றி பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கேரளா போலீஸ் அதிகாரிகள் முகாமிட்டிருந்த இடத்தில் இருந்த முதியவர் ஒருவரின் முன்னிலையில் ஸ்ரீஜித் என்கிற 30 வயது காவலர், தான் உண்ணுவதற்காக உணவு பொட்டலத்தை பிரித்துள்ளார். அப்போது அதையே பார்த்துக்கொண்டிருந்த முதியவரைப் பார்த்த ஸ்ரீஜித், ‘நீங்க சாப்டிங்களா?’ என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த பெரியவர் முகவாட்டத்துடன்  ‘இல்லை’ என்று கூறியிருக்கிறார். உடனே காவலர் ஸ்ரீஜித்,  ‘உங்களுக்கு ஆட்சேபனை இல்லனா, என்னோட ஷேர் பண்ணி சாப்பிடுங்க.. வாங்க..’ என்று அழைத்துள்ளார். முதலில் தயக்கத்துடன் முதியவர் மறுத்துள்ளார். ஆனால் ஸ்ரீஜித் அவரின் தயக்கத்தை போக்கும்படி இலுகுவாக வற்புறுத்தியுள்ளார். அதன் பின் இருவரும் ஒரே மேஜையில் உணவுப்பொட்டலத்தை வைத்து நின்றுபடியே உண்டுள்ளனர். 

இந்த வீடியோ ஸ்ரீஜித்தின் நண்பரால் எடுக்கப்பட்டு யதார்த்தமாக இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதுபற்றி பேசிய ஸ்ரீஜித், ‘இது ஒரு சாதாரண நல்லியல்புதான், ஆனால் முதியவர் இப்படியான அணுகுமுறையை எதிர்பார்க்காததால் முதியவர் சற்று பயந்து, முதலில் தயங்கினார். ஆனால் தான் அந்த பயத்தை போக்கி நட்பாக பேசியதால் சாப்பிடத் தொடங்கினார்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

KERALA, VIDEOVIRAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்