"ஏரியாவ பாத்தா ஏதோ 'வெளிநாடு' மாதிரி இருக்கு... 'இந்தியா'ல இருக்குன்னு நம்பவே முடியல..." நெட்டிசன்களை அசர வைத்த 'மாநிலம்'... வைரலாகும் 'புகைப்படம்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சமூக வலைத்தளங்களில் வெளியான பூங்கா ஒன்றின் புகைப்படங்கள் நெட்டிசன்கள் பலரையும் அதிகமாக கவர்ந்து வருகிறது.

அதன் கட்டிடக் கலை அமைப்பிற்கும், புதுமையான ஒரு தோட்டத்திற்கும் அதிகம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. திடீரென பார்க்கும் போது வெளிநாடுகளில் இருக்கும் இடம் போல ஒரு உணர்வை ஏற்படுத்தும் நிலையில், இந்த அருமையான பூங்காவை கேரளா மாநிலத்தில் உருவாக்கியுள்ளனர்.

 

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில், வடகரா அருகேயுள்ள கரக்காடு கிராமத்தில் இந்த வக்பதானந்தா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் திறந்து வைத்தார். சுமார் 2.80 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள இந்த பூங்காவில், திறந்த மேடை, பேட்மிண்டன் களம், திறந்தவெளி உடற்பயிற்சி நிலையம், குழந்தைகள் பூங்கா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

 

1885-1939 காலகட்டத்தில் கேரளாவின் மறுமலர்ச்சிக்காக போராடிய வக்பதானந்தா என்ற கேரளாவின் மூத்த தலைவரை கவுரவிக்கும் வகையில் இந்த பூங்காவிற்கு அவரது பெயரை கேரள அரசு சூட்டியுள்ளது. இந்த பூங்காவிற்கு செல்லும் மக்கள் தகுந்த முறையில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களிடையே இந்த பூங்காவிற்கும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்