'8 நாளா தேடியும் கண்டுபுடிக்க முடியல!.. 2 வயசு தான் ஆகுது'!.. காணாமல் போன குழந்தையை... கடைசி நேரத்தில் மீட்டெடுத்த நாய்!.. மனதை உருக்கும் பாசப் போராட்டம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரள மாநிலம் பெட்டி முடி பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவில் தனது எஜமானின் 2 வயது குழந்தையை கண்டறிய நாய் ஒன்று உதவியுள்ளது.

கேரள மாநிலம் பெட்டி முடி மற்றும் ராஜா மாலா பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வந்த குடும்பங்கள் சிக்கின. இந்த நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், காணாமல் போன நபர்களை தேடும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கிய தனது எஜமானின் குழந்தையை மீட்க நாய் ஒன்று உதவியது அனைவரையும் கண் கலங்கச் செய்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மீட்பு பணியினர், நிலச்சரிவில் காணாமல் போன நபர்களைத் தேடும் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த 'குவி' என்ற பெயர் கொண்ட நாய் ஒன்று, ஆற்றின் அடியில் எதையோ எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. சந்தேகமடைந்த மீட்பு பணியினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஆற்றில் கிடந்த ஒரு மரத்தில் 2 வயது குழந்தை தனுஷ்கா சிக்கிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த மீட்பு படையினர் உடனடியாக தனுஷ்காவை ஆற்றிலிருந்து தூக்கினர்.

தனுஷ்காவின் குடும்பத்தில் அவரது 54 வயதான பாட்டி மட்டுமே உயிருடன் இருக்கிறார். தனுஷ்காவின் தந்தையான பிரதீப்பின் சடலம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்டது. பிரதீப்பின் மனைவியான கஸ்தூரியும், அவரது சகோதரி ப்ரியதர்ஷினியையும் மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்