'முன்மாதிரியா இருந்துச்சு’... ‘மற்ற மாநிலங்களை விட’... ‘தற்போது இந்த மாநிலத்தில் மட்டும்’... ‘கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு’...!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

'நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறைந்து வரும் நிலையில், கேரளத்தில் மட்டும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்தோரில் தொற்று கண்டறியப்பட்டோரின் விகிதம் 10 விழுக்காடாக அதிகரித்துள்ளது. வேறு எந்த மாநிலத்தையும் விட கேரளத்தில் கொரோனா சோதனை செய்தோரில் தொற்று கண்டறியப்பட்டோரின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நவம்பர் 30 முதல் டிசம்பர் 13 வரையான இரு வாரங்களில் தொட்டு கண்டறியப்பட்டோர் விகிதம் 9.4 விழுக்காடாக இருந்தது. இது டிசம்பர் 13 முதல் 26 வரையான இரு வாரங்களில் 10 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் தேசிய அளவில் தொற்று கண்டறியப்பட்டோர் விகிதம் 3 விழுக்காட்டில் இருந்து 2.2 விழுக்காடாக குறைந்துள்ளது.

இந்தியாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ்  பரவியபோது அதை சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் முதன்மையானது கேரளா. அனைத்து மாநிலங்களும் கேரளாவை ஒரு முன்னுதாரணமாக கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

ஆனால், ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது கேரளாவில் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையிலும் குணமடைவோர் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்து வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்