ஆற்றின் கரை அருகே 'Wedding' போட்டோஷூட்??.. எதிர்பாராத நேரத்தில் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தற்போதைய காலகட்டத்தில், திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள், திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணத்திற்கு பின்போ, போட்டோஷூட் எடுத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Advertising
>
Advertising

அந்த தமிழ்நாடு பிளேயர World cup மேட்ச்'ல ரொம்ப மிஸ் பண்ணோம்.. அவர் இருந்திருந்தா கதையே வேற.. இப்போ ஃபீல் பண்ணும் ரவி சாஸ்திரி

இதற்காக வேண்டி, பல சுற்றுலாத் தளங்களைத் தேர்வு செய்து, அங்கு சென்று புகைப்படங்களை எடுத்தும் வருகின்றனர்.

இந்நிலையில், புதிதாக திருமணம் செய்து கொண்ட ஜோடி ஒன்று, போட்டோஷூட் எடுக்க முற்பட்ட போது, பெருந்துயரம் ஒன்று அவரை வந்து சேர்ந்துள்ளது.

'Wedding' போட்டோஷூட்

கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியை அடுத்த குட்டியடி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ரெஜிலால். இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன், திருமணம் நடந்து முடிந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக, ரெஜிலாலும் அவருடைய மனைவியும், வெட்டிங் போட்டோஷூட் ஒன்றை எடுக்க திட்டம் போட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள குட்டியடி ஆற்றின் கரை ஓரம் வைத்து, புகைப்பட கலைஞர்கள், புகைப்படங்களை எடுக்க திட்டம் போட்டுள்ளனர். அந்த சமயத்தில் மணமக்கள் மற்றும் ஃபோட்டோகிராஃபர்களுடன் இருவரின் உறவினர்களும் இருந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

எதிர்பாராத சம்பவம்

அந்த வேளையில், எதிர்பாராத விதமாக மாப்பிள்ளை ரெஜிலால், ஆற்றுக்குள் விழுந்துள்ளார். அது மட்டுமில்லாமல், அவருடன் சேர்ந்து அவரது மனைவியும் ஆற்று நீரில் விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. 

இதனைக் கண்டு, அங்கிருந்த அனைவரும் பதறிப் போக, உடனடியாக ரெஜிலால் மற்றும் அவரது மனைவியை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டுள்ளனர். இருவரையும் மீட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வேளையில், ரெஜிலால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது மனைவி, படுகாயமடைந்து, தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆபத்தான பகுதி

தொடர்ந்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மேற்கொண்டு விசாரணையும் நடத்தி வருகின்றனர். இது பற்றி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அதிகாரி ஒருவர் பேசுகையில், "ரெஜிலால் விபத்தில் சிக்கிய இடம், மிகவும் ஆபத்தான ஒன்றாகும். பாதுகாப்பு நடவடிக்கைகளை புறக்கணித்து அங்கு சென்றுள்ள பலர் இது போன்று விபத்தில் சிக்கி உள்ளனர். அதில் மிக குறைவானவர்கள் மட்டுமே அதிர்ஷ்டவசமாக தப்பி உள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் முடிந்த கொஞ்ச நாட்களில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது, புதுமண தம்பதிகளின் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

"ட்விட்டர்ல எடிட் பட்டன் வேண்டுமா??.." எலான் மஸ்க் போட்ட ட்வீட்.. பாத்து பண்ணுங்க.. எச்சரித்த ட்விட்டர் 'CEO'..

KERALA, NEWLY MARRIED, YOUNG MAN, DROWNS, RIVER, FAMILY, WEDDING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்