'வாட்டி வதைத்த கோர பசி.. மண்ணை உண்ட மகன்'!.. குடிகார கணவனால் 4 குழந்தைகளுடன் பெண் எடுத்த முடிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவின் திருவனந்தபுரத்திற்கு அருகே அமைந்துள்ளது கைதமுக்கு. இங்குள்ள ரயில்வே பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் ஷெட் போட்டு வசிக்கும் பல குடும்பங்களுள் ஒன்றுதான் ஸ்ரீதேவியும் அவரது ஆறு குழந்தைகளும்.
7 வயதாகும் முதல் குழந்தை முதல், 3 மாதமாகும் கடைசிக் குழந்தை வரை உள்ள 4 குழந்தைகளையும் கூலி வேலை செய்யும் தனது கணவரின் வருமானத்தை வைத்துதான் பார்த்துக்கொள்ள முடியும் என்கிற நிலையில் இருக்கும் ஸ்ரீதேவியோ, தனது கணவர், அவர் சம்பாதிக்கும் குறைந்த பணத்தையும் வைத்து மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் குழந்தைகளுக்கு எதுவும் வாங்க முடியாமல் தவித்துள்ளார்.
ஆனால் பசிபொறுக்காமல் மண்ணை அள்ளித் திண்ற தனது மூத்த மகனைப் பார்த்ததும் பொறுக்க முடியாத ஸ்ரீதேவி, கேரள குழந்தைகள் காப்பகத்தில் சென்று தனது 2 ஆண் குழந்தைகளையும் 2 பெண் குழந்தைகளையும் ஒப்படைத்து கதறி அழுதுள்ளார். கண்கலங்கிய காப்பக நிர்வாகிகள், கடைசி 2 கை குழந்தைகளை தாயிடமே ஒப்படைத்துவிட்டு, மற்ற மகன்களை காப்பகத்தில் சேர்த்துக்கொண்டனர். அவர்களை எப்போது வேண்டுமானாலும் ஸ்ரீதேவி தன்னுடன் அழைத்துச் செல்லலாம், ஆனால் அவர்களுக்கு உணவும் கல்வியும் நிறைவாக வழங்கப்படுவதோடு, தாய் ஸ்ரீதேவிக்கு தற்காலிகப் பணி வழங்கும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் காப்பக நிர்வாகி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பேசிய ஸ்ரீதேவி, ‘என் கணவர் மேல் புகார் அளித்து பயனில்லை. அதே நேரம் என் குழந்தைகள் வயிறார உண்டு வாழ்ந்தால் போதும்’ என்று கூறி மனதை இறுக்கமாக்கிக் கொண்டு குழந்தைகளை பிரிந்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘திருமணத்திற்கு’ செல்லும் வழியில்.. ‘மழைநீர்’ தேங்கிய பள்ளத்துக்குள் கவிழ்ந்த கார்.. ‘நொடிப்பொழுதில்’ மூழ்கிய பரிதாபம்..
- ‘பிறந்து சில தினங்கள் தான்’... ‘சிதைந்த நிலையில்’... ‘ஆற்றில் மிதந்து வந்த குழந்தை சடலம்’!
- 'சென்னையில் செல்போனால் வந்த வினை!'.. 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி!
- 'என் பொண்ண சிதைச்சிட்டாங்களே'...'நான் சொல்ற தண்டனைய கொடுங்க'...பிரியங்காவின் தாய் ஆவேசம்!
- ‘அரளி விதை கலந்த பாலை குடித்த 5 மாத குழந்தை’.. ‘தலைமறைவான தாய்’.. வெளியான பகீர் தகவல்..!
- ‘தந்தை மடியில்’ அமர்ந்திருந்த சிறுமிக்கு.. ‘கண் இமைக்கும் நேரத்தில்’ நடந்த பயங்கரம்.. ‘சபரிமலைக்கு’ செல்லும் வழியில் கோர விபத்து..
- ‘பலத்த மழை’.. ‘அதிவேகத்தில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்’.. ‘நள்ளிரவில்’ வீட்டிலிருந்த குழந்தை உட்பட 3 பேருக்கு பயங்கரம்’..
- 'கியர் மாற்றிய'.. கல்லூரி பெண்களைத் தொடர்ந்து'.. அடுத்த பதற வைத்த சம்பவம்.. வீடியோவால் ஓட்டுநருக்கு வேட்டு!
- 'கமுக்கமா இருந்த யானை'...'திடீரென பக்தரின் சட்டையை உருவி'...வைரலாகும் திக் திக் வீடியோ!
- ‘விளையாடிட்டு இருந்த பையன்’.. ‘திடீர்னு தலைக்குள் சிக்கிய பானை’.. ‘மீட்க முயன்ற தீயணைப்புப்படை’.. பரபரப்பு சம்பவம்..!