'எங்களுக்கு ஒண்ணுனா வந்து நிப்பா'.. தாய்-மகள் தற்கொலையில் திடீர் திருப்பம்.. கதறிய மாணவிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள நெய்யாற்றின்கரையைச் சேர்ந்த சந்திரன் வளைகுடாவில் வேலை பார்த்து வந்தவர்.  

இவரது மனைவி லேகாவுக்கு வயது 42. இந்த தம்பதியரின் ஒரே மகளான 19 வயதான வைஷ்ணவி பி.காம் படித்து வந்த நிலையில், உடல்நிலையால் பாதிக்கப்பட்டு சந்திரன் கேரளாவில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார். இந்நிலையில் கடந்த 14-ஆம் தேதி தாய் லேகாவும், மகள் வைஷ்ணவியும் தீக்குளித்து இறந்துள்ளனர்.

இந்த அதிர்ச்சி சம்பவத்துக்கு காரணம் தனியார் வங்கியில் வாங்கிய வங்கிக்கடன்தான் என்று கூறப்பட்டது. கடந்த 2015-ஆம் ஆண்டு வீட்டு கட்டுவதற்காக கனரா வங்கியில் 5 லட்சம் ரூபாய் இவர்கள் கடன் வாங்கியதாகவும், அதற்கு லேகாவும், வைஷ்ணவியும் 8 லட்சம் ரூபாய் வட்டியோடு கொடுக்கப்பட்டுவிட்டதாகவும், ஆனாலும் மேற்கொண்டு வங்கிக்கு 6 லட்சம் ரூபாய் கடன் தொகையை திருப்பித்தரச் சொல்லி வங்கியில் இருந்து டார்ச்சர் செய்யப்பட்டதாலும் இவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகவும் முதலில் சந்திரன் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் காவல்துறையினரின் விசாரணைக்குப் பிறகு,  லேகா எழுதிவைத்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதன்படி, வங்கிக்கடனையும் தாண்டி, கணவரின் குடும்பம், தன்னையும் தன் மகளையும் நிம்மதியாய் இருக்கவிடவில்லை என்றும், தன்னை வரதட்சணை கேட்டும், மந்திரவாதிகளிடம் அழைத்துச் சென்று தன்னைக் கொடுமைப் படுத்தினார்கள் என்றும் அந்த கடிதத்தில் லேகா குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து  கணவர் சந்திரன் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வைஷ்ணவியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட அவரது கல்லூரித் தோழிகள், வைஷ்ணவிக்கு டாக்டருக்கு படிக்க வேண்டும் என்கிற  ஆசை இருந்ததால், அவருக்கு ஒருவேளை மெடிக்கல் சீட்டு கிடைத்துவிட்டது என்று நினைத்தோம், கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கிய வைஷ்ணவி காலேஜ் லீடர் என்பதால் அனைவரிடமும் பேசுவார். எல்லார் பிரச்சனைகளுக்கும் முன்வந்து நிற்பார். அம்மா பற்றி அதிகம் பேசும்  வைஷ்ணவி ஒருமுறை கூட அப்பா பற்றி பேசியதில்லை. அவளின் இந்த முடிவு தங்களுக்கு பெருத்த சோகத்தைக் கொடுத்துள்ளதாகவும் கூறி, விம்மி அழுதுள்ளனர்.

புகைப்பட நன்றி: மாத்ருபூமி

KERALA, SAD, SUICIDE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்