சபரிமலை : கால் வலியால் அவதிப்பட்ட ஐயப்ப பக்தர்.! காலை பிடித்து விட்ட கேரள அமைச்சர்.. நெகிழ்ச்சி சம்பவம்!..
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்திபெற்ற ஐயப்பன் திருக்கோவில். கார்த்திகை மாதம் முதல் நாள் துவங்கிய உடனேயே பக்தர்கள் சபரிமலைக்கு இருந்து சாமி தரிசனம் செய்ய துவங்குவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டுகளுக்கான கோவில் நடை கடந்த நவம்பர் 16 ஆம் தேதி, மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடையை மேல்சாந்தி திறந்து வைத்து தீபம் ஏற்ற, 18 ஆம் படிகள் வழியே ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்து திருநீறு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்கத் துவங்கி உள்ளனர்.
பலரும் சபரிமலை கோவிலுக்கு தினமும் சென்றும் வருகின்றனர். இந்நிலையில் சபரிமலைக்கு செல்லும் வழியில் காலில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக ஐயப்பன் பக்தர் ஒருவர் கால் வலியால் தவித்திருக்கிறார். அவரை கண்ட கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சர் அவர் காலை பிடித்து மசாஜ் செய்துள்ளார்.
ஆந்திர, கர்நாடக காவல்துறையினரும், மத்திய அதிரடி விரைவு படையினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் கேரளாவில் சபரிமலை பூஜை சூழலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த பாதுகாப்பு பணிகளை பார்வையிடுவதற்காக கோவிலுக்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல், பழங்குடியின நலத்துறை மற்றும் தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.
அந்த சமயத்தில்தான் ஐயப்ப பக்தர் ஒருவர் கால் வலியால் மலையேற முடியாமல் அவதிப்பட்டு கொண்டிருந்தார். அவரை பார்த்து அமைச்சர் காரில் இருந்து உடனடியாக இறங்கி கால் வலியால் அவதிப்பட்ட அந்த பக்தரிடம் என்னவென்று விசாரித்திருக்கிறார். அதன் பின்பர்தான் பக்தருக்கு தசை பிடிப்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அமைச்சர் பக்தரின் காலை பிடித்து நீவி விட்டு மசாஜ் செய்து இருக்கிறார். அருகில் இருந்தவர்கள் இதனை போட்டோ எடுத்திருக்கின்றனர். அமைச்சர் ஒருவர் இப்படி ஐயப்ப பக்தருக்கு காலை நீவி விட்ட மனிதநேயமிக்க இந்த சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் பாராட்டையும் குவித்து வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Wimbledon : 'ஆல் ஒயிட்' உடைக்கு இனி இல்லை தடா..! இனி அடர்நிற அண்டர் ஷார்ட்ஸை வீராங்கனைகள் அணியலாம்.! விம்பிள்டன் அதிரடி.
- Sivan Kutty : “பாடி ஷேமிங் ஒரு கேவலமான செயல்!..”.. பள்ளி பாடத்தில் விழிப்புணர்வை கொண்டுவரும் கேரள அரசு? கவனம் பெற்ற அமைச்சரின் கருத்து.!
- 1165 கிமீ தூரமா.?.. "வாரோம் சாமி சன்னிதானம்".. சபரிமலை ஐயப்பனை தரிசிக்க 33 ஆண்டுகளாக பாத யாத்திரை..
- "கேரளா, டெல்லி".. 2 கொலைகள்.. இரண்டுக்கும் நடுவே இருந்த ஒற்றுமைகள்??... பீதியை ஏற்படுத்தும் பின்னணி!!
- "இதைவிட என்ன வேணும்".. மாவட்ட கலெக்டரை மனதார வாழ்த்திய பாட்டி.. வைரலாகும் கலெக்டரின் ட்வீட்..!
- மனைவி கொடுத்த ஹார்லிக்ஸ்.. கொரியரில் வந்த விஷம்.. கேரளாவில் அடுத்த அதிர்ச்சி!!
- "நைட் 9 மணிவரை போன் பண்ண கூடாது.!" மணப்பெண்ணிடம் இப்படி ஒரு அக்ரீமெண்ட் எழுதி வாங்கிய மாப்பிள்ளையின் நண்பர்கள்..!
- 10 முயற்சியும் தோல்வி.!. 11வது முறை விஷம் கொடுத்து காதலனை கொன்றாரா..? இளம்பெண் வழக்கில் பகீர்!!
- "முடி கொட்டுறது நிக்கவே இல்ல".. Treatment எடுத்தும் சரி ஆகாத விரக்தியில் இருந்த இளைஞர்.. துயர சம்பவம்!!
- கோவை TO கேரளா.. சைக்கிள்ல போய் தாலி கட்டிய மாப்பிள்ளை.. அவர் சொன்ன காரணத்தை கேட்டு அசந்துபோன உறவினர்கள்..!