"மகனுக்காக பீரங்கியையே கொண்டு வந்து நிறுத்திய ராணுவ வீரர்.. ஆனா ஒரு சூப்பர் ட்விஸ்ட்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரள மாநிலத்தில் உள்ள வீடு ஒன்றில் ராணுவ பீரங்கி நிற்கும் நிலையில், அதன் பின்னால் உள்ள காரணம், தற்போது பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.

Advertising
>
Advertising

கேரள மாநிலம், கொடாராக்காரா கரிப்பிறா பகுதியை சேர்ந்தவர் ப்ரவீன். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு திருமணமான நிலையில், சரண்யா என்ற மனைவியும், நான்கு வயதில் ஆதிதேவ் என்ற ஒரு மகனும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழலில், ஊருக்கு விடுமுறைக்கு வரும் போதெல்லாம் தனக்கு ஒரு ராணுவ பீரங்கி வேண்டுமென தந்தையிடம் கேட்டு ஆதிதேவ் அடம்பிடித்து வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. மகனின் ஆசையை நிறைவேற்ற ஏதாவது செய்ய வேண்டும் என தாய் சரண்யாவும் தனது கணவர் பிரவீனிடம் கூறி வந்துள்ளார்.

தான் புதிதாக கட்டி வந்த வீட்டிற்கு காஷ்மீர் என பெயரிட்ட ப்ரவீன், வீட்டிற்கு முன் வெட்டிய கிணற்றை ராணுவ பீரங்கி வடிவில் மாற்றி அசத்தி உள்ளார். சிமெண்ட் மூலம் இந்த ராணுவ டேங்கர் பீரங்கி கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் பெயிண்டிங் பணி முடிந்து பார்ப்பதற்கு அசல் பீரங்கி போல இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக, டிவியில் ராணுவ டேங்கர் பீரங்கி பார்த்த தனது மகன் ஆதிதேவ், அப்பாவும் மிலிட்டரியில் தான் இருக்கிறார் என்றும் அவரிடமும் ஒரு பீரங்கியை கொண்டு வர சொல்லுங்கள் என்றும் கேட்டுக் கொண்டே இருந்ததாக தெரிகிறது. அப்படி ஆசைப்பட்ட மகனின் ஆசையை நிறைவேற்றும் விதமாக தான் அடூரை சேர்ந்த சிலா சந்தோஷ் என்பவர் மூலம் வீட்டு முற்றத்தில் பீரங்கி ஒன்றை உருவாக்கவும் ப்ரவீன் முடிவு செய்துள்ளார்.

ராணுவத்தில் பயன்படுத்திய பீரங்கிகள் மாடலை கொண்டு அதே மாடலில் இவர்கள் வடிவமைத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே பல மாடல்களில் கிணறு அமைத்துள்ள சிலா சந்தோஷ், இந்த பீரங்கி கிணற்றையும் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.

மேலும் இந்த பீரங்கியின் பின்பகுதியில் இருந்து தண்ணீர் எடுக்கும் பகுதி அமைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் உள்ள அனைத்து ராணுவ வீரர்களுக்காகவும் இந்த பணியை அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளனர். மகனின் ஆசையை நிறைவேற்ற ராணுவத்தில் இருக்கும் தந்தை, பீரங்கி வடிவில் உருவாக்கிய கிணற்றின் புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

KERALA, MILITARY MAN, TANKER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்