போன வருசம் கேரள லாட்டரியில் 12 கோடி ஜெயிச்ச ஆட்டோ ஓட்டுநர்.. "இப்போவும் நான் ஆட்டோ தான்'ங்க ஓட்டுறேன்".. சுவாரஸ்ய பின்னணி!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் ஓண பண்டிகையை முன்னிட்டு, சமீபத்தில் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தது.

Advertising
>
Advertising

இதற்கான முடிவுகள் நேற்று (18.09.2022) வெளியாகி இருந்த நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான அனூப், 25 கோடி ரூபாய் பரிசினை வென்றிருந்தார்.

முன்னதாக, குடும்ப சூழ்நிலை காரணமாக மலேசியாவுக்கு சமையல்காரராகவும் செல்ல அனூப் திட்டம் போட்டிருந்தார். அப்படி ஒரு வேளையில் தான், அனூப்பிற்கு லாட்டரியில் பரிசு அடித்துள்ளது.

பலரும் அனூப்பிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், ஒரே நாளில் தனது வாழ்க்கையே மாறி போனதால் உச்சகட்ட உற்சாகத்தில் உள்ளார் அனூப். இதனிடையே, கடந்த ஆண்டு ஓணம் பம்பர் லாட்டரி வென்ற நபர் குறித்த செய்தி, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பம்பர் லாட்டரி சீட்டுகள் கேரளாவில் விற்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த ஆண்டின் ஓணம் லாட்டரி பரிசான 12 கோடி ரூபாயை கொச்சி பகுதியை மராடு என்னும் இடத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜெயபாலன் வென்றிருந்தார். ரூபாய் 12 கோடியில், வரி உள்ளிட்ட விஷயங்கள் போக 6 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

இந்த பரிசை பெற்று கோடீஸ்வரராக ஜெயபாலன் மாறி ஒரு ஆண்டு ஆன நிலையில், தற்போதும் அவர் ஆட்டோ தான் ஒட்டி வருகிறார். மேலும் அதே வீட்டில் தான் தொடர்ந்து வசித்து வருகிறார்.

இதுகுறித்து பேசும் ஜெயபாலன், "எளிமையான வாழ்க்கை தான் நீடித்த வாழ்க்கைக்கு சிறந்தது என்பது என்னுடைய நம்பிக்கை. பரிசுத் தொகையில் பெரும் பகுதியை வங்கியில், பிக்சட் டெபாசிட் செய்துள்ளேன். ஒரு சில இடத்தில் நிலமும் வாங்கி உள்ளேன். எனக்கு பரிசு விழுந்த பிறகு, பல்வேறு அமைப்புகள் நன்கொடை கேட்கின்றன. ஆனால், எனக்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே உதவி செய்கிறேன். இதனால், எனக்கு 2 முறை கொலை மிரட்டல்கள் கூட வந்திருக்கிறது.

ஏழை மக்கள் மருந்து வாங்குவதற்காக உதவும் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கி வருகிறேன். பொதுவாக, சுப நிகழ்ச்சிக்கு 100 ரூபாய் நான் மொய் வைப்பது வழக்கம். இப்போது என்னிடம் அதிக தொகையை எதிர்பார்க்கின்றனர்" என ஜெயபாலன் கூறி உள்ளார்.

KERALA, LOTTERY, AUTO DRIVER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்