"ஒரு நாள் கூட Wait பண்ணல".. ஐபோன் மீது கொண்ட மோகம்.. இந்தியாவில் இருந்து துபாய் பறந்த சேட்டன்.. "அதும் இத்தன ரூபா செலவுலயா?"

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஐபோன் வாங்குவதற்காக துபாய்க்கு சென்ற இந்தியர் ஒருவர் தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

Advertising
>
Advertising

பொதுவாக, தங்களின் விருப்பமான ஒரு விஷயத்தை அடைவதற்காக பல கிலோ மீட்டர்கள் பயணம் செய்யும் விஷயத்தினை திரைப்படங்களில் அதிகம் பார்த்திருப்போம்.

அந்த வகையில், நிஜத்திலேயே நபர் ஒருவர் ஐ போனுக்காக பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்து வருகிறார் என்பது தான் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

கேரள மாநிலம், கொச்சி பகுதியை சேர்ந்தவர் தீரஜ் பல்லியில். இவர் அப்பகுதியில் சொந்தமாக தொழில் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, ஐபோன் 14 ப்ரோ வாங்குவதற்காக துபாய் வரை சென்றுள்ளார் தீரஜ். முன்னதாக, ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ ஆகிய போன்கள், இந்தியாவில் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி விற்பனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்தியாவில் வருவதற்கு ஒரு நாள் முன்பாக துபாய் சென்ற தீரஜ், ஐபோன் 14 ப்ரோவை வாங்கி உள்ளார். ஐபோன் 14 ப்ரோவை வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் தீரஜ் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த ஐபோன் 14 ப்ரோவின் விலை, சுமார் 1,29,000 வரை என தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனை வாங்குவதற்காக விமான டிக்கெட், விசா உள்ளிட்ட செலவுகள் என மொத்தம் 40 ஆயிரம் ரூபாய் வரை தீரஜ் செலவு செய்ததாக.கூறப்படுகிறது.

இதற்கு முன்னரும் ஐபோன் வாங்குவதற்காக துபாய் சென்றுள்ளார் தீரஜ். ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 உள்ளிட்ட மாடல்கள் முதல் முறையாக விற்பனைக்கு வந்ததும், அதனை வாங்கவும் அவர் துபாய் சென்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஐபோன் மீது கொண்ட விருப்பம் காரணமாக துபாய் வரை சென்று முதல் ஆளாக ஐபோன் வாங்கிய இந்தியரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

I PHONE 14, DUBAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்