டீக்கடை முன்பு 'எழுதி' வைத்த வாசகம்...! 'இங்கிலாந்து'ல இருந்துலாம் போன்கால் வருது...! மனசே வெறுத்து போய் தான் 'போர்டு' வச்சேன்...! - இப்போ என் செல்போனுக்கு 'ரெஸ்ட்' இல்ல...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளா மாநிலம் வல்லாச்சிராவை சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன். இவர் தன்னுடைய டீக்கடை முன்பு எழுதி வைத்த வாசகத்தினால் உலகம் முழுவதும் இருந்து அழைப்பு வந்துக் கொண்டிருக்கிறது.
தனக்கு ஒரு துணை வேண்டும் என விரும்பிய உன்னிகிருஷ்ணன் 'மணமகள் தேவை' என்று தன்னுடைய டீக்கடை முன்பாக ஒரு போர்டு வைத்துள்ளார். மேலும் அதில் முக்கியமாக ஜாதி, மதத்தை தான் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். டீக்கடை முன் 'மணமகள் தேவை' போர்டு வைக்கப்பட்டதற்கான காரணத்தை உன்னி கிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, 'நான் கூலி தொழிலாளியாக வாழ்ந்து வந்தேன். சில மாதங்களுக்கு முன் என் தலையில் ஒரு கட்டி வந்தது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அறுவை சிகிச்சைக்கு பின் முழுமையாக குணமடைந்து நலமாக உள்ளேன். எனக்கும் வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் ஒரு லாட்டரி கடையை தொடங்கினேன். பின்பு அது டீக்கடையாக விரிவுப்படுத்தி, தற்போது வியாபாரம் சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
அடுத்தகட்டமாக ஒரு திருமணம் செய்துக் கொள்ளலாம் என முடிவு எடுத்தேன். அதற்காக வழக்கம் போல் கல்யாணத் தரகரை போய் பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனது ஜாதகத்தை வைத்து கொண்டு உறவினர்கள் வரன் பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது சொத்தை, இது சரியில்லை என்று வருகிற வரன் எல்லாமே பாதியில் கழன்று விடுகிறது. ஆகவே இதெல்லாம் சரி வராது என்று டீக்கடை முன் போர்டு வைக்கலாம் என முடிவெடுத்தேன்' என்று கூறியுள்ளார்.
டீக்கடை முன்பாக வைக்கப்பட்ட போர்டை உன்னியின் நண்பர் ஒருவர் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து எக்கச்சக்க அழைப்புகள் அவருக்கு வர தொடங்கி உள்ளது. இதில், ஆச்சரியம் என்னவென்றால் இந்தியா மட்டுமல்லாது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்து அழைப்புகள் வருகிறது. தற்போது வரும் அழைப்புகளை எடுத்து பேசுவதற்கு கூட நேரமில்லாமல் தவிப்பதாக உன்னிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சார், நீங்க 'நினைக்குற' மாதிரி எதுவும் இல்ல...! என்ன நம்புங்க, சத்தியமா அது 'பெயிண்ட்' தான்...! 'பேன்டின் உள்பக்கத்தில் செக் பண்ணியபோது...' - என்ன என்ன 'பண்றாங்க' பாருங்க...!
- ‘அவங்க கோர முகம் கொஞ்சமும் மாறல’!.. ஆப்கான் இளம்பெண்ணுக்கு நடந்த சொல்ல முடியாத கொடுமை.. பெண் செய்தியாளர் வெளியிட்ட ‘பகீர்’ தகவல்..!
- VIDEO: ‘மாட்டேன்.. மாட்டேன்.. நான் வரமாட்டேன்’ மண்டப வாசலில் ‘அடம்பிடித்து’ நின்ற மணப்பெண்.. காரணத்தை கேட்டா அப்படியே ‘ஷாக்’ ஆகிடுவீங்க..!
- கேட்கும்போதே ஈரக்கொலை நடுங்குதே!.. ‘எங்க பஸ்ஸை திடீர்னு தாலிபான்கள் வழிமறிச்சிட்டாங்க’.. ஆப்கானில் சிக்கிய கேரள இளைஞரின் பதபதைக்க வைக்கும் அனுபவம்..!
- நீ எப்போ 'அக்கா' ஊருக்கு வருவ...? 'காபுல் ஏர்போர்ட்'க்கு வந்து பல நாளாச்சு...! - கேரளாவில் 'கண்ணீரோடு' காத்திருக்கும் குடும்பம்...!
- முதலிரவு அறையில் ரகசிய கேமரா.. ‘என்னது இதெல்லாம் உங்க வேலை தானா..!’ ஷாக்குக்கு மேல் ஷாக்.. புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடுமை..!
- என் மகளே... நீ எங்க இருக்க...? கேரள ஐஎஸ் தீவிரவாதி நிமிஷாவை 'ரிலீஸ்' செய்த தாலிபான்கள்...! - உதவி கேட்டு கதறி அழும் தாய்...!
- "எங்கள பத்தி விஷமத்தனமான பிரச்சாரம் பண்றாங்க"!.. திடீரென ட்விஸ்ட் கொடுத்த தாலிபான்கள்!.. திரைமறைவில் நடப்பது என்ன?
- உங்க 'பொண்ணுங்கள' எங்களுக்கு 'மனைவி' ஆக்குறீங்களா இல்லையா...? 'ரத்தக்கண்ணீர் வடிக்கும் குடும்பங்கள்...' - தொடரும் தாலிபான்களின் அட்டூழியங்கள்...!
- VIDEO: அப்பாவி Single-ஐ நடுத்தெருவில் நிறுத்திய 'திருமண வரன்'!.. Matrimony மூலம் நூதன மோசடி!.. 'இளம்பெண்' சிக்கியது எப்படி?