VIDEO: நூலிழையில் தப்பிச்சேன்னு சொல்லுவாங்களே.. அது ‘100 சதவீதம்’ இவருக்கு பொருந்தும்.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சாலையில் மரம் வேரோடு சாய்ந்து வீழ்ந்தபோது ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் காரணமாக கேரளாவில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. 30-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டவ்-தே புயல் தீவிரமடைந்துள்ளதால் எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது டவ்-தே புயல் மிக தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாகவும், அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவடையக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

இந்த நிலையில் கேரள மாநிலம் வர்கலா பகுதியில் ஒருவர் சாலையில் நடந்து சென்றபோது, எதிர்பாரதவிதமாக பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்துள்ளது. இதை உடனே கவனித்த அவர் அங்கிருந்து வேகமாக ஓடி நூலிழையில் உயிர் தப்பினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்