'திரைப்பட' பாணியில் 'பெண்ணை' கொன்று 'இளைஞர்' செய்த காரியம்!.. 'நடுங்க' வைக்கும் 'சம்பவம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாபநாசம் பட பாணியில் பெண்ணை கொலை செய்து வீட்டிலேயே புதைத்தவரை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் நடுங்க வைத்துள்ளது.
கேரளாவில் கோட்டயம் அருகே உள்ள ஊர் திருக்கோவில்வட்டம். இது கொல்லம் பகுதியை சேர்ந்த ஊராகும். இந்த ஊரில் வசித்து வந்த 42 வயதான சுசித்ரா என்கிற அழகுக்கலை நிபுணர் கடந்த மார்ச் 18ம் தேதி அன்று கொச்சியில் ஒரு நிகழ்வில் கலந்து கொள்வதாக கூறிவிட்டு தனது வீட்டை விட்டு வெளியேறியதாகவும் ஆனால் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என்றும் கோட்டயம் காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரித்ததில் சுசித்ரா தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் 5 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்வதாக அவர் வேலைபார்க்கும் அழகுநிலைய முதலாளியிடம் தகவல் தெரிவித்துவிட்டு சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து சுசித்ராவின் தொலைபேசி அழைப்புகளை பரிசோதனை செய்தபோது அவர் பாலக்காட்டில் உள்ள பிரசாந்த் என்கிற இசை ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு பேசியதை போலீஸார் கண்டறிந்துள்ளனர். பின்னர் கொல்லத்தை சேர்ந்த குற்றப் பிரிவு அதிகாரிகள் குழு விசாரணைக்காக பாலக்காடு விரைந்து பிரசாந்திடம் இதுபற்றி விசாரணை நடத்தியது. அப்போதுதான் பிரசாந்த் இந்த கொலையை செய்தது தான் தான் என ஒப்புக்கொண்டார்.
ஆகவே அவரைக் கைது செய்த பின்பு போலீசார், சுசித்ராவின் உடலை கால்கள் இரண்டும் துண்டிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட நிலையிலும் கண்டெடுத்துள்ளனர். விசாரணையில் கடந்த மார்ச் 18ஆம் தேதி பிரசாந்த் தனது குடும்பத்தினரை வெளியே அனுப்பிவிட்டு சுசித்ராவுடன் தனது இல்லத்தில் உல்லாசமாக இருந்ததாகவும், அப்போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும், இந்த சண்டையில் பிரசாந்த் சுசித்ராவை ஒரு டேபிள் விளக்கின் ஒயரைக் கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கொலையை மூடி மறைப்பதற்காக பிரசாந்த் இறந்துபோன சுசித்ராவின் இரு கால்களையும் துண்டித்து எரிக்க முயன்றதாகவும், அதன் பின்னர் உடலை பாலக்காடு இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள இவரது வாடகை வீட்டின் பின்புறம் பின்பக்கம் அடக்கம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த விவரங்கள் யாவும் காவல்துறைக்கு வாக்குமூலமாக பிரசாந்த் அளித்துள்ளார். அதனை வைத்துதான் சுசித்ராவின் உடலை போலீசார் தற்போது மீட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கேரளாவிலேயே மிகப் பெரிய பங்களா’... ‘துபாயைக் கலக்கிய இந்திய தொழிலதிபர் எடுத்த துயர முடிவு’... ‘போலீசார் தந்த அதிர்ச்சி தகவல்’!
- "இது அடிபொழி ஐடியா சாரே"... 'சமூக இடைவெளி'யை கடைபிடிக்க... 'கேரள' கிராம மக்களின் அசத்தல் 'ப்ளான்'!
- 'தொடர்ந்து 20 முறையும் பாசிட்டிவ்'... '21 முறை நெகட்டிவ்'... 'நாட்டையே ஆச்சரியப்படுத்திய கேரளா'... சாதித்தது எப்படி?
- கொரோனா தொற்றால் பலியான ‘4 மாத குழந்தையின்’ இறுதிச்சடங்கு.. நெஞ்சை ‘ரணமாக்கிய’ போட்டோ..!
- கொரோனாவுக்கு 'எதிரான' போராட்டத்தில்... 'முன்னிலையில்' உள்ள 'தென்' மாநிலங்கள்... 'நம்பிக்கை' தரும் எண்ணிக்கை...
- ‘எப்படி வந்ததுனே தெரியலை’... 'நான்கு மாத பச்சிளம்’... ‘பெண் குழந்தைக்கு நிகழ்ந்த துக்கம்’!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'ஊரடங்கிலும் உடல்தானம்...' 'வாழ்ந்தப்போ தேடித்தேடி உதவி செய்வார்...' 'மார்க்கம் அனுமதிக்கல, ஆனாலும்...' நெகிழ வைத்த முஸ்லீம் குடும்பம்...!
- 'காருக்குள் இருந்தபடியே சோதனை...' 'கேரள அரசின் புதிய கண்டுபிடிப்பு...' 'கொரோனா' பணியில் 'புரட்சி' செய்யும் 'திரங்கா வாகனம்...'
- 'அறிகுறிகள்' எதுவுமின்றி '19வது முறையும்' பெண்ணுக்கு பாசிட்டிவ்... '42 நாட்கள்' சிகிச்சைக்குப் பின்... 'கவலையில்' மருத்துவ குழு...