வாழ்க்கை பூரா 'சைக்கிள்' மிதிக்குறதுலையே போயிடும்னு நினைச்சேன்...! 'கூரையை பிய்த்துக் கொண்டு வந்த அதிர்ஷ்டம்...' ஒரே நாளில் மில்லினியர்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

விற்காமல் இருந்த லாட்டரி சீட்டுகளால் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் கோடிஸ்வரரான சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.

வாழ்க்கை பூரா 'சைக்கிள்' மிதிக்குறதுலையே போயிடும்னு நினைச்சேன்...! 'கூரையை பிய்த்துக் கொண்டு வந்த அதிர்ஷ்டம்...' ஒரே நாளில் மில்லினியர்...!
Advertising
>
Advertising

பொதுவாக ஒரு சிலர் வறுமையில் இருப்பவர்களை பார்த்து அவர்களின் துயரத்திற்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ஒரு நாள் விடிவு காலம் பிறக்கும், லட்சுமி வரும் போது கூரையை பிய்த்துக் கொண்டு பணம் கொட்டும் என்ற வாக்கியங்களை எல்லாம் சொல்வார்கள். அதுபோல கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் ஒரே நாளில் கோடிஸ்வரர் ஆன சம்பவம் நடந்துள்ளது.

Kerala man became a millionaire with unsold lottery tickets

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த சஜிமோன் என்பவர் சில வருடங்கள் முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நிம்மதியாக சென்ற அவரின் வாழ்வில் தீடீரென ஏற்பட்ட உடல்நிலை கோளாறு காரணமாக சஜிமோனுக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

அதன் பின், அவருக்கு முன்பு பார்த்த வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அவரின் குடும்பம் வறுமையில் சிக்கி தவித்தது. இதன் காரணமாக சஜிமோன் தனது குடும்பத்தை காப்பாற்ற லாட்டரி சீட்டுகளை விற்று வந்துள்ளார்.

தனக்கு என்று ஒரு சைக்கிளை வாங்கி அதன் மூலம் கேரளாவில் உள்ள பல பகுதிகளுக்கு சென்று லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில், லட்சுமி அவரின் வாசல் கதவை தட்ட ஆரம்பித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன் அவர் விற்ற லாட்டாரி சீட்டுக்களில் ஒரு 4 சீட்டுகள் மட்டும் விற்பனையாகாமல் இருந்துள்ளது. என்னடா இது இந்த சீட்டுக்கள் மட்டுமே விற்க வில்லையே என சில நாட்கள் மன வருத்தத்தில் இருந்த சஜிமோனுக்கு அதன் மூலமாகவே பேரதிர்ஷ்டம் அடித்துள்ளது.

அவர் வைத்திருந்த 4 லாட்டரி சீட்டுகளில் ஒரு லாட்டரி சீட்டுக்கு ரூ 2 கோடி பரிசு விழுந்துள்ளது. இதனால், அதிர்ச்சி மற்றும் ஆச்சரியம் அடைந்த சஜிமோன் லாட்டரி சீட்டில் விழுந்த பணத்தை வைத்து என் குடும்பத்தை மேம்படுத்துவேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

KERALA, MILLIONAIRE, LOTTERY TICKETS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்