'புகையிலை வாங்க போன பாட்டி...' 75 வயது என்றும் பாராமல்...' 'சீரழித்த இளைஞர்கள்...' - மகனுக்கு உடந்தையாக இருந்த தாயும் கைது...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலத்தில் 75 வயது மதிக்கத்தக்க பாட்டியை பாலியல் வன்கொடுமைக்குக்கு ஆளாக்கிய வழக்கில் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கோலஞ்சேரி பாங்கோடு பகுதியில் 75 வயது மூதாட்டி ஒருவர் தீடிரென ஏற்பட்ட ரத்த போக்கு காரணமாக மயங்கி விழ, கோலஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். மேலும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு, பாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளதாகவும், அவரின் சிறுநீர்ப்பை மற்றும் குடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணையை தொடங்கிய போது, பாட்டியின் குடும்பத்தார் சில தகவல்களை அளித்தனர். அதில், அவர் புகையிலை வாங்க பக்கத்துக்கு வீட்டுக்கு சென்றபோது தான் இப்படி நடந்துள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் பாட்டி புகையிலை வாங்க சென்ற 66 வயதான ஓமனா என்பவரின் வீட்டில் விசாரித்த போது பாதிக்கப்பட்ட பாட்டி புகையிலை கேட்டு வீட்டிற்குள் நுழையும் போது கீழே விழுந்துவிட்டார் எனவும், அவருக்கு மனநிலை சரி இல்லை என பல்வேறு மழுப்பல் பதில்களை சொல்லியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த கேரள காவல்துறையினர் 66 வயது ஒமனாவையும், அவரது குடும்பத்தாரையும் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரித்ததில் பல அதிர்ச்சிகர சம்பவங்கள் வெளியாகியுள்ளன.
விசாரணையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட பக்கத்து வீட்டு பாட்டி புகையிலை வாங்க வந்ததாகவும், அப்போது அவருக்கு புகையிலை மற்றும் தேநீர் கொடுத்து அமர வைத்ததாக தெரிவித்துள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த அவரது மகன் மனோஜ் அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தெரிவித்தார். மேலும் மகனின் நண்பர் முகமது ஷாஃபி என்பவரும் இந்த குற்ற செயலில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ளார். தற்போது ஓமனா, அவரது மகன் மனோஜ் மற்றும் முகமது ஷாஃபி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் 75 மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கூரிய ஆயுதங்கள் கொண்டு பாட்டியின் உறுப்புகளை தாக்கியுள்ளனர். தற்போது 75 வயது பாட்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர சம்பவத்திற்கு கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா வருத்தம் தெரிவித்ததோடு, குற்றவாளிகள் மீது பலத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கேரள மகளிர் ஆணையத் தலைவர் எம் சி ஜோசபின், மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அந்த பெண்ணின் சிகிச்சைக்கான செலவுகளை ஏற்குமாறு வலியுறுத்தினார். இதனையடுத்து கே.கே.ஷைலாஜா, கண்டிப்பாக மருத்துவ செலவுகளை கேரள அரசாங்கம் ஏற்கும் என உறுதிபட கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 3 ரோலக்ஸ் வாட்ச்... ரூ.1 கோடி மதிப்புள்ள போர்ஷே கார்... ஒத்த பேப்பர் வச்சு சொகுசு வாழ்க்கை... தலைக்கு தில்ல பாத்தீங்களா!?
- ராத்திரி நேரத்துல... 'புருஷன' அடிச்சி போட்டுட்டு... அவரு 'கண்ணு' முன்னாடியே... நள்ளிரவில் 'பைக்'கில் வந்த நபர்களால்.... 'மனைவி'க்கு நேர்ந்த 'கொடூரம்'!!!
- அமெரிக்காவில் இந்திய ஆராய்ச்சியாளர் நடுரோட்டில் படுகொலை!.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!.. நொறுங்கிப் போன குடும்பம்!
- 'இறப்பதற்கு முன் சுஷாந்திற்கு போன் செய்த திஷா'... 'அன்று நடந்த பார்ட்டியில்'... 'புதிதாக வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்கள்!'...
- 'உன்ன பாக்கணும், மாங்காய் மண்டிக்கு வா...' 'சடலமாக கிடந்த இளைஞர்...' 'விசாரணையில் திடீர் திருப்பம்...' - கொலையாளி யார் என கண்டுபிடித்த போலீசார்...!
- 'டெஸ்ட் பண்றேன்னு சொல்லி...' 'தகாத முறையில என் உடம்ப தொட்டார்...' - கொரோனா பாதித்த பெண்ணிற்கு நடந்த கொடுமை...!
- 'ஆம்பள' பையன் 'பொறக்கல'ன்னு கோவத்துல... பொம்பள கொழந்த பொறந்த அன்னைக்கே அத கையில எடுத்து... கோபம் தலைக்கேறி வெறிச்செயலில் ஈடுபட்ட 'கணவர்'... திகைத்து நின்ற 'மனைவி'!!!
- 'கனவில் வந்த மாமியார், மாமனாரால்'... '6 வயது மகளை'... 'பெண் செய்த உறையவைக்கும் காரியம்'... 'வெளிவந்த அதிர்ச்சி வாக்குமூலம்'...
- 'பணம் எடுக்காமலேயே வந்த எஸ்.எம்.எஸ்கள்'... 'ரூ 5 கோடிக்கும் மேல்'... 'சினிமா பாணியில் ஹேக்கர்கள் செய்த காரியத்தால் அதிர்ச்சியில் ஊர்மக்கள்'...
- ‘பிரேத பரிசோதனையின்போது’ அதிர்ந்த மருத்துவர்கள்.. ‘மாட்டிக்கொண்ட பிறகு’ மனைவி கொடுத்த ‘பரபரப்பு’ வாக்குமூலம்!