‘முதலில் கணவர், அடுத்து 2 வயது குழந்தை’.. ‘காதலருடன் தப்பிய மனைவி செய்த அதிர்ச்சிக் காரியம்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் கணவரைக் கொலை செய்துவிட்டு தலைமறைவான மனைவியும், அவருடைய காதலரும் விஷம் அருந்திய நிலையில் மும்பை விடுதி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் ரிஜோஷ் - லிஜி என்ற தம்பதி வேலை செய்துவந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி தனது கணவரைக் காணவில்லை என லிஜி போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் தனது கணவர் கோழிக்கோடு பகுதியில் இருந்து ஃபோன் செய்ததாக லிஜி கூறியுள்ளார். போலீஸார் கால் வந்த அந்த எண்ணை ட்ரேஸ் செய்தபோது அது ரிஜோஷ் - லிஜி வேலை செய்து வந்த பண்ணை வீட்டின் உரிமையாளர் வாசிமின் நண்பருடையது எனத் தெரியவந்துள்ளது. பின்னர் அவரிடம் விசாரித்ததில் வாசிம் சொன்னதாலேயே அவர் அப்படி செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியதும் லிஜி தனது 2 வயது குழந்தை மற்றும் வாசிமுடன் தலைமறைவாகி உள்ளார். இதனால் லிஜிக்கும், வாசிமுக்கும் இடையே தகாத உறவு இருக்கலாம் என சந்தேகித்த போலீஸார் வாசிமின் பண்ணை வீட்டை சோதனை செய்துள்ளனர். அப்போது பண்ணை வீட்டின் பின்புறம் சாக்குமூட்டையில் கட்டப்பட்டு புதைக்கப்பட்டிருந்த ரிஜோஷின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவருடைய உடலை மீட்டு பிரேதப் பரிசோதனை செய்ததில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வாசிம் வாட்ஸ்அப் வீடியோ மூலம் போலீஸாருக்கு தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “இந்தக் கொலையை நான் மட்டுமே தனியாகச் செய்தேன். இதில் யாருக்கும் தொடர்பு இல்லை. அதனால் என் நண்பர்கள், சகோதரர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை மும்பையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த வாசிமும், லிஜியும் நீண்ட நேரமாகியும் அறைக் கதவைத் திறக்காமல் இருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் சென்று பார்த்தபோது வாசிம், லிஜி, அவருடைய 2 வயது குழந்தை மூவரும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். பின்னர் மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர்கள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. அங்கு லிஜியின் 2 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்ட நிலையில், லிஜி, வாசிம் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மும்பை போலீஸார் அளித்த தகவலின் அடிப்படையில் கேரள தனிப்படை போலீஸார் அங்கு விரைந்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தங்கச்சியை இப்டி செஞ்சிட்டாங்களே’!.. தோப்பில் சடலமாக கிடந்த பள்ளி சிறுமி..! பக்கத்துவீட்டுக்காரரின் பகீர் வாக்குமூலம்..!
- ‘கோயிலுக்கு கூட்டிப்போறேன்னு’... ‘பக்கத்து வீட்டு சிறுமியை அழைத்துப்போய்’... ‘இளம் தம்பதி செய்த அதிர்ச்சி காரியம்’!
- ‘சென்னை ஐஐடி மாணவி எடுத்த விபரீத முடிவு’.. ‘விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்’..
- ‘ஆண் நண்பர்களுடன் சேர்ந்து’.. ‘இளம்பெண் செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘கணவருக்கு நேர்ந்த கொடூரம்’..
- ‘பாதுகாப்புக்காக சென்ற போலீஸ் வேன்’.. ‘பேருந்துக்கு காத்திருந்தவர்கள் மீது மோதி கோர விபத்து’..
- ‘தாத்தாவுடன் வெளியே சென்ற’.. ‘2 வயது குழந்தைக்கு நடந்த பயங்கரம்’.. ‘சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்’..
- ‘கலப்புத்திருமணம்’!.. ‘4 வருஷம் தலைமறைவு’! சொந்த ஊருக்கு வந்த காதல் தம்பதியை கல்லால் அடித்துக் கொன்ற ஊர்மக்கள்..!
- ‘அவரு நல்லாதான் இருக்காரு’.. ‘போலீஸாரிடம் நாடகமாடிய மனைவி’.. ‘ஆண் நண்பருடன் சேர்ந்து செய்த அதிரவைக்கும் காரியம்’..
- '30 வருஷ BSNL ஊழியர்.. பல கி.மீ நடந்தே வருவார்'.. '10 மாத சம்பள பாக்கி'.. 'ஒரு நொடியில் எடுத்த பரிதாப முடிவு'!
- 'ஆடிப்பாடி' டிக் டாக் செய்த மனைவி.. 'தலைக்கேறிய' ஆத்திரம்.. கழுத்தை நெரித்து 'கொன்ற' கணவர்!