"வீட்டுக்கு வா.. கொரோனா நெகடிவ்னு ரிப்போர்ட் தர்றேன்!".. சுகாதார ஆய்வாளரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரு தாயும், அவரது 19 வயது மகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அடூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், அந்த இளம்பெண்ணை அங்குள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு மருத்துவர்கள் நேற்று முன்தினம் மாற்றினர். இதற்கென 108 ஆம்புலன்ஸ் மூலம் அப்பெண் கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில்தான் ஆம்புலன்ஸ் டிரைவரான நவுபல் (வயது 29), வண்டியை செல்லும் வழியில், அரன்முழா பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நிறுத்தியதுடன்,  அந்த இளம்பெண்ணை கொரோனா நோயாளி என்றும் பாராமல் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ந்த அந்த இளம் பெண், தனது தாயிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தார். தன் மகளுக்கு நேர்ந்த கதி பற்றி அறிந்ததும் அதிர்ந்துபோன, அந்த தாய் உடனே மருத்துவமனை நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்புலன்ஸ் டிரைவர் நவுபலை கைது செய்தனர்.

கேரளாவில் நடந்த இந்த பரபரப்பு அடங்குவதற்குள் 40 வயதுடைய பெண் ஒருவர் மலப்புரத்தில் இருந்து குளத்துப்புழாவுக்கு வீட்டில் தங்கி செவிலியர் பணிபுரிய சென்றபோது நடந்த சம்பவம் அதிரவைத்துள்ளது. அவரை சிகிச்சை மையத்தில் வைத்து பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்தது.  இந்நிலையில், அவரை குளத்துப்புழா முதன்மை சுகாதார மைய இளநிலை சுகாதார ஆய்வாளர் பிரதீப் (வயது 44) , தனது வீட்டிற்கு வருமாறு கூறியதுடன், தனது தொலைபேசி எண்ணை கொடுத்து,  கொரோனா நெகடிவ் சான்றிதழை அங்கு வந்து பெற்று கொள்ளும்படி கூறியுள்ளார்.

இதனை நம்பி அங்கு சென்ற, பெண்ணை அந்த ஆய்வாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அந்த அதிகாரியை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே அவரை சுகாதார மந்திரி சைலஜாவின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்