'அவங்க இத கத்துக்கணும்ன்னு தான் இப்படி செஞ்சேன்'... 'பெற்ற குழந்தைகளை வைத்து அரை நிர்வாண உடலில் ஓவியம்'... விளாசிய உயர்நீதிமன்றம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெற்ற குழந்தைகளை வைத்து தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைந்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட வழக்கில், ரெஹானா பாத்திமாவை உயர்நீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா கடந்த மாதம் தனது மைனர் குழந்தைகளை வைத்து தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய வைத்து, ‘உடல் மற்றும் அரசியல்’ என்ற தலைப்பில் வீடியோவை வெளியிட்டார். சமூகவலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோ கடும் அதிர்வலைகளையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. ஏற்கெனவே சபரிமலை விவகாரத்தில் கடும் சர்ச்சையில் சிக்கிய அவரின் இந்த வீடியோ கேரள மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தனது குழந்தைகளை வைத்து அரை நிர்வாண உடலில் எவ்வாறு ஓவியம் வரையலாம், இது குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல் என்று பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. பத்தனம் திட்டா மாவட்ட பாஜக தலைவர் ஏ.வி.அருண் பிரகாஷ் திருவல்லா போலீஸில், ரெஹானா பாத்திமாவின் சர்ச்சைக்குரிய வீடியோவைக் காண்பித்து அவர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்திலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையமும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து,ரெஹானா பாத்திமா மீது போக்சோ சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம், சிறார் நீதிச்சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். முன்ஜாமீன் கோரி ரெஹானா பாத்திமா கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் தான் செய்த செயலை நியாயப்படுத்தியும், தனது குழந்தைகளுக்குப் பாலியல் கல்வியைக் கற்றுக்கொடுக்கவே தனது உடலில் படம் வரையவைத்து உணர்த்தினேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.வி.உன்னிகிருஷ்ணன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அமர்வில் ரெஹானா பாத்திமா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், “மனுதாரர் தனது குழந்தைகளுக்குப் பாலியல் கல்வியைக் கற்றுக் கொடுக்கத்தான் இவ்வாறு செய்தார்” எனத் தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி உன்னிகிருஷ்ணன் கடும் கோபமடைந்தார். மேலும் கடுமையாகப் பேசிய அவர், ''ரெஹானா பாத்திமாவுக்கு வேண்டுமானால் அவரின் கொள்கையின்படி, அவரின் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க முழு உரிமை இருக்கிறது. ஆனால், அவை அனைத்தும் 4 சுவர்களுக்குள் அவரின் வீட்டுக்குள் இருந்திருக்க வேண்டும்.
மனுஸ்மிருதி, புனித குர்ஆன் நூல்களைப் படித்துப் பார்க்கச் சொல்லுங்கள். அதில் குழந்தைகளின் வாழ்வில் தாயின் பங்கு என்ன என்பது விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கும். மேலும் மனுதாரர் தனது குழந்தைகளுக்குப் பாலியல் கல்வியைச் சொல்லிக்கொடுக்க வேண்டும் எனும் வாதங்களையும், விளக்கத்தையும் நிச்சயமாக ஏற்க முடியாது'' எனக் கூறி நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “அவங்கள எங்க கஸ்டடில விடுங்க”... சூடு பிடிக்கும் ‘ஸ்வப்னா சுரேஷ்’ விவகாரம்.. பரபரப்பை ‘கிளப்பும்’ பகீர் திருப்பம்!
- VIDEO : 'பார்வையற்ற நபர்' பஸ் 'ஏற' உதவி செய்த பெண்... வீடு தேடி வந்த 'ஜாக்பாட்' பரிசு...! - 'இன்ப அதிர்ச்சி'யில் கண்ணீர் விட்டு 'அழுகை'...!!!
- எங்க மாநிலத்துல 'கொரோனா' சமூக பரவல் ஆயிடுச்சு... அதிர்ச்சி தகவல் வெளியிட்ட 'முதல்வர்'!!
- "சிஸ்டர் எங்க, இங்க இருந்த 'கத்திரி'ய காணோம்???” ”...அது பேஷண்ட் வயத்துல வெச்சு தைச்சுட்டீங்க, டாக்டர்...!" - ஆபரேஷன் போது, அதிர்ச்சி கொடுத்த சீனியர் 'டாக்டர்'!!!
- ஸ்வப்னா ‘தங்க கடத்தல்’ வழக்கு... சிக்கிய ’சீனியர் ஐ.ஏ.எஸ்.’ அதிகாரி! - ’வாடகை வீடு... நெருங்கிய தொடர்பு...!’ - ’9 மணி நேர’ கிடிக்கிப்பிடி விசாரணையில் வெளியான ’பகீர்’ தகவல்கள்!
- “பொண்ணு ரஷ்யால இருந்து வந்து 14 நாள் தனியா இருந்தா”.. மகளைக் காணச் சென்ற பெற்றோர்கள் கண்ட இதயம் நொறுங்கும் காட்சி!
- “யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்?” .. ‘கேரளா.. பெங்களூரு.. கல்ஃப்’ .. காய்நகர்த்தல் முதல் கைது வரை.. அதிரவைக்கும் பின்னணி!
- தங்கக்கடத்தல்.. டிமிக்கி கொடுத்து வந்த கேரள அதிகாரி 'ஸ்வப்னா சுரேஷ்'.. பெங்களூரில் அதிரடி கைது!.. நடந்தது என்ன?
- "எங்களுக்கு 'கொரோனா' இருக்குதா...? அப்ப, இந்தாங்க... உங்களுக்கும் வரட்டும்...!" - 'டெஸ்ட்' பண்ண வந்த டாக்டர்'ஸ் மேல... இருமி இருமியே 'ஊர விட்டு' தொரத்தி இருக்காங்க!... அலறியடிச்சு 'ஓடிய' மருத்துவர்கள் - 'பரபரப்பு' சம்பவம்!!!
- 'ஸ்வப்னா' வெளியிட்ட பரபரப்பு ஆடியோ: "'தற்கொலை'யோட விளிம்பில நிக்குறேன்... எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, நீங்க அத்தன பேரும் தான் 'காரணம்'...” - 'கேரள' கடத்தல் வழக்கில் அடுத்த 'டுவிஸ்ட்'!