'கர்ப்பமா இருக்குன்னு தெரிஞ்சும் இத செய்ய எப்படி மனசு வந்துச்சோ'... 'அதிர்ந்துபோன அதிகாரிகள்'... நெஞ்சை ரணமாக்கும் சோகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் கர்ப்பமாக இருந்த யானை ஒன்று வெடி மருந்துடன் இருந்த அன்னாசிப் பழத்தைத் தின்றதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த வடுக்களே இன்னும் மறையாத நிலையில் மீண்டும் ஒரு துயரம் நடந்துள்ளது.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சக்கிக்குழி வனச்சரக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் ஒன்று வந்தது. அதில், காட்டு விலங்கு ஒன்றை வேட்டையாடி அதைச் சாப்பிடுவதாக அதில் கூறப்பட்டது. இதையடுத்து அன்றிரவே அந்த குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை வனச்சரக அதிகாரிகள் மடக்கிப்பிடித்தார்கள். அப்போது தான் அந்த அதிர்ச்சி தகவல் அவர்களுக்குத் தெரியவந்தது. சோதனை நடந்த இரவே 25 கிலோ மதிப்பிலான இறைச்சியை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

முதலில் அதை மானின் இறைச்சி என்றே அதிகாரிகள் கருதினார்கள். இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட சுரேஷ் பாபுவை கைது செய்த பிறகு தான் அது காட்டெருமை என அறிந்தோம். அங்கிருந்த எலும்புகளை நாங்கள் சேகரித்ததில் அந்த காட்டெருமை சினையாக இருந்த தகவல் எங்களுக்குத் தெரிய வந்தது. பிரேதப் பரிசோதனையில் அந்த காட்டெருமை கர்ப்பமாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. கர்ப்பமாக இருந்த விலங்கை இந்த கொடுமைக்கு ஆளாக்க எப்படி தான் இந்த குற்றவாளிகளுக்கு மனசு வந்ததோ என அதிகாரிகள் வேதனையுடன் கூறியுள்ளார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்