பர்ஸ்ட் 'பூத்'ல போங்க ... அடுத்து உங்க வேலைய பாருங்க ... கொரோனாவைத் தடுக்க கேரள அரசின் 'பிரேக் தி செயின்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைவதையொட்டி 'பிரேக் தி செயின்' என்ற திட்டத்தை கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வரை கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கேரள மாநிலத்தில், அதிகபட்சமாக 21 பேர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 14,944 பேர் கண்காணிப்பில் உள்ளனர். மேலும், 259 பேர் மருத்துவமனையின் கண்காணிப்பில் உள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 'பிரேக் தி செயின்' என்ற திட்டத்தை கேரள சுகாதாரத்துறை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறுகையில், 'கொரோனா வைரஸ் தொற்று, சங்கிலி தொடர் போல் பரவி வருகிறது. இந்த சங்கிலியை தடுக்க 'பிரேக் தி செயின்' என்ற திட்டத்தை ஏற்படுத்தியுள்ளோம். இதன்படி அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நுழைவுப்பகுதியில் `பிரேக் தி செயின்' பூத் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். நிறுவனத்திற்குள் நுழையும் ஒவ்வொருவரும் அந்த பூத்தில் சென்று தங்களது கைகளை கழுவிக் கொண்டோ அல்லது ஹேண்ட் சானிட்டிசர் பயன்படுத்திக் கொண்டோ உள்ளே நுழைய வேண்டும். இதன் மூலம் ஒருவரிடம் இருந்து பிறருக்கு பரவுவதை தடுக்க முடியும்' என தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் மாஸ்க் தட்டுப்பாடு நிலவி வருவதால் சிறையிலுள்ள கைதிகளை பயன்படுத்தி கேரள அரசு மாஸ்க்குகளை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா கிட்ட இருந்து கூட தப்பிச்சுரலாம்' ... 'ஆனா அவங்க கொரோனாவ விட டேஞ்சர்' ... தமிழக அமைச்சரின் கிண்டல் பேச்சு!
- 'ஒரு மாசத்துக்கு மேல உயிர குடுத்து வேல செஞ்சாங்க' ... இத விட வாழ்க்கைல சிறந்த தருணம் எதுவும் இருக்க முடியாது... 'கொரோனா' மருத்துவ பணியாளர்களின் மகிழ்ச்சி வீடியோ!
- 'லாபம்' எதுவும் எங்களுக்கு வேணாம் ... 'மக்களோட' நலன் தான் முக்கியம் ... கேரளாவில் பிரபலமான இரண்டு ரூபாய் 'மாஸ்க்'!
- 'கொரோனா வந்தா என்ன'?... 'நெஞ்சுல நின்னுட்டிங்க டீச்சர்'... ரிஸ்க் எடுத்த ஆசிரியையின் நெகிழ்ச்சி செயல்!
- ஒண்ணும் ஆகாது, தைரியமா இருங்க .... 'பீதி'யில் உறைந்து போன மக்களுக்கு .... தைரியம் தரும் 'சுகாதாரத்துறை'!
- 'கை தட்டல்கள்', 'ஆரவாரங்கள்' இல்லாமல் ... சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ... முதல் முறையாக நடந்த சம்பவம் !
- இந்தியாவில் தீவிரமடையும் 'கொரோனா' ... 'ரசிகர்கள்' இல்லாமல் நடைபெறவுள்ள 'இந்தியா - தென்னாபிரிக்கா' போட்டி ?
- 'யோகிபாபு', 'நிரோஷா' ஆகியோருடன் ... 'தமிழக அரசு' வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ
- 'பல்லாயிரம்' மக்கள் திரண்டிருந்த மைதானம் ... ஒருவருக்கு உறுதி செய்யப்பட்ட கொரோனா ...
- இந்தியாவில் தீவிரமடையும் 'கொரோனா' ... 'பள்ளிகள்' முதல் 'திரையரங்குகள்' வரை ... டெல்லி முதல்வரின் புதிய அறிவிப்பு