ஸ்வப்னா ‘தங்க கடத்தல்’ வழக்கு... சிக்கிய ’சீனியர் ஐ.ஏ.எஸ்.’ அதிகாரி! - ’வாடகை வீடு... நெருங்கிய தொடர்பு...!’ - ’9 மணி நேர’ கிடிக்கிப்பிடி விசாரணையில் வெளியான ’பகீர்’ தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் நடந்துள்ள தங்கக் கடத்தல் வழக்கில், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சிவசங்கரிடம், சுங்க வரித் துறையினர், சுமார் ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா உள்ளிட்டோருடன் நட்பு இருந்ததை, அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்துக்கு வந்த பார்சலில், பதினைந்து கோடி ரூபாய் மதிப்புள்ள, 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து, தூதரக ஊழியர் சரித், தூதரகத்தின் முன்னாள் பணியாளராக, ஸ்வப்னா சுரேஷ், அவருடைய கூட்டாளி சந்தீப் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலர், எம்.சிவசங்கருக்கும் இந்தக் கடத்தலில் தொடர்பு உள்ளதாக தகவல் வெளியானதையடுத்து, அவர் பதவிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

கேரள அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சிவசங்கருக்கு, சுங்கத் துறை உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் மாலை, சரியாக 5:15 மணிக்கு துவங்கிய விசாரணை, நேற்று அதிகாலை, 2:15 மணி வரை நடந்தது.

                            

இதுகுறித்து ஐஏஎஸ் அதிகாரி கூறிய கருத்துகளை அதிகாரிகள் கூறுகையில் "தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ள, ஸ்வப்னாவுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததை, சிவசங்கர் ஒப்புக் கொண்டார். தகவல் தொழில்நுட்ப துறையில், ஸ்வப்னா பணியாற்றியுள்ளார். அப்போது, அலுவலக பணி நிமித்தமாக, சிவசங்கருடன் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தத் தொடர்பு, நட்பாக மாறியுள்ளது. அதன்பிறகே, சரித், சந்தீப் உள்ளிட்டோரையும், சிவசங்கருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவர்களுக்குள் இடையே உள்ள தொடர்பு குறித்து, பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. பல, 'சிசிடிவி' வீடியோ காட்சிகளை காட்டி அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டதா தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணையில், திருவனந்தபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ஸ்வப்னாவுக்காக அதிகாரி சிவசங்கர் வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்தது தற்போது உறுதியாகியுள்ளது. இந்த வீட்டில் ஸ்வப்னா அடிக்கடி வந்து தங்கி சென்றுள்ளார். இந்த தகவலைக் கொண்டு சிவசங்கர் கைது செய்யப்படலாம் அல்லது பணிநீக்கம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்