'ஸ்வப்னா' வெளியிட்ட பரபரப்பு ஆடியோ: "'தற்கொலை'யோட விளிம்பில நிக்குறேன்... எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, நீங்க அத்தன பேரும் தான் 'காரணம்'...” - 'கேரள' கடத்தல் வழக்கில் அடுத்த 'டுவிஸ்ட்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்த பெட்டி ஒன்றில் சுமார் 13 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் சிக்கிய நிலையில் இந்த கடத்தல் வழக்கு தொடர்பாக சரித் நாயர் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் தேடப்பட்டு வரும் நிலையில், அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். ஸ்வப்னா சுரேஷ், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிந்து வந்த நிலையில், இந்த கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் மற்றும் முதல்வர் அலுவலக அதிகாரிகளுக்கு இதில் சம்மந்தம் உள்ளது என்றும், முதல்வர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக இந்த தங்க கடத்தல் வழக்கு கேரள அரசியலில் கடும் குழப்பங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாகவுள்ள ஸ்வப்னா சுரேஷ் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 'விமான நிலையம் வந்த பெட்டி, தூதரகம் வர தாமதம் ஆன நிலையில் அது உடனே வந்தடைய என்னிடம் உதவி கேட்கப்பட்டது. அது தொடர்பாக நான் சுங்கத்துறை அதிகாரிகளிடம் பேசினேன். அதன் காரணமாக தான் நான் சிக்கிக் கொண்டேன். மற்றபடி, எனக்கும் அந்த கடத்தல் தங்கத்திற்கு எந்தவித தொடர்பும் கிடையாது' என்றார்.

மேலும், அந்த ஆடியோவில், 'நான் வகிக்கும் பணி தொடர்பாக, பல  அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் பேசியுள்ளேன். ஆனால், என்னுடைய நலனுக்காக யாரிடமும் உதவி கேட்டதில்லை. ஒரு பெண்ணான என்னை இப்படி தவறாக சித்தரித்து என்னையும், என் குடும்பத்தையும் தற்கொலை விளிம்பில் ஊடகமும், மற்றவர்களும் நிறுத்தி விட்டீர்கள். இந்த வழக்கு தொடர்பாக, முதல்வருக்கோ, இல்லை மற்ற கட்சி உறுப்பினர்களுக்கோ, மந்திரிகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இதனால், முழுக்க முழுக்க பாதிப்பு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் தான். அப்படி, மரணம் நிகழும் நிலை வந்தால் நீங்கள் ஒவ்வொருவரும் அதற்கு காரணம் தான். நான் இப்போது தலைமறைவாக இருப்பது, தங்க கடத்தல் குற்றம் செய்ததற்காக அல்ல. எனக்கும், என் குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட அச்சம் காரணமாக தான்' என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சரியான முறையில் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் அவர் அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்