'வீட்டுல வருவாங்களான்னு தெரியாது'...'காதலர்களின் ப்ரீ வெட்டிங் ஷூட்'...வைரலாகும் புகைப்படங்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் ஓரே பாலினத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீம் மற்றும் நிவேத் அந்தோனி என்பவர்கள் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில், இருவரது ப்ரீ வெட்டிங் ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ஓரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் உறவு கொள்வதும் திருமணம் செய்வதும் சட்டப்பிரிவு 377-ன் படி இந்தியாவில் தண்டனைக்குரிய செயலாக இருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஓரின சேர்க்கை குற்றமில்லை என்று தீர்ப்புவழங்கியது. அதனைத்தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஓரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம், நிகேஷ் உஷா புஷ்கரன் மற்றும் சோனு ஆகியோர் திருமணம் செய்துகொண்டதாக ஃபேஸ்புக்கில் அறிவித்தனர். அவர்களது திருமணம் கேரளாவில் நடைபெற்ற முதல் ஓர்பால் திருமணம் ஆகும். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த அப்துல் ரஹீம் மற்றும் நிவேத் அந்தோனி என்பவர்கள் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்கள். அதற்காக திருமணத்திற்கு முன்பு நடத்தப்படும் 'ப்ரீ வெட்டிங் ஷூட்டில்' இருவரும் ஏராளமான புகைப்படங்களை எடுத்து கொண்டார்கள்.
இதுகுறித்து பேசிய நிவேத் ஆண்டனி சல்லிக்கல் மற்றும் அப்துல் ரெஹிம், '' மற்ற இந்திய திருமணங்கள் போன்றே தன்பாலின ஈர்ப்பினர்களின் திருமணமும் அழகாக இருக்கும் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக தான், நாங்கள் எங்களின் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்தோம். ஆனால் இது வைரலாகும் என்று நினைக்கவில்லை.
மேலும் இந்த திருமணத்திற்கு இரு வீட்டிலும் சம்மதம் தரவில்லை. அதனால் அவர்கள் திருமணத்தில் பங்கேற்கமாட்டார்கள். ஆனாலும் எங்களின் மீது வெறுப்பு ஏதும் அவர்களுக்கு இல்லை. நிவேத் தரப்பில் அவருடன் அவருடைய திருநங்கை அம்மாவும், திருநங்கை சகோதரியும் இந்த திருமணத்தில் பங்கேற்பார்கள் என கூறினார்கள்''. இதனிடையே இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘துணிச்சலுடன்’ மீட்க இறங்கியவரின் உடலை ‘சுற்றிய’ மலைப்பாம்பு... நொடியில் கிணற்றுக்குள் ‘தவறிவிழுந்த’ பயங்கரம்...
- விபத்தில் ‘இறந்துவிட்டார்’ என நினைத்தபோது... ‘காவலர்’ செய்த காரியத்தால் ‘நிமிடங்களில்’ நடந்த அதிசயம்.. வைரலாகப் பரவும் வீடியோ..
- ‘விக்கெட்’ எடுக்கலன்னா என்ன... பந்து கிடைத்தும் ‘ரன் அவுட்’ ஆக்காமல்... இதயங்களை ‘வென்ற வீரர்’...
- நீங்க தான் எப்போதுமே ‘என்னோட கேப்டன்’.. ‘ட்விட்டரைக் கலக்கிய’ கோலியின் ‘வாழ்த்து ட்வீட்’..
- திடீரென காரை ‘உடைத்துக்கொண்டு’ வளர்ந்த மரம்.. ‘ஆச்சரியத்தை’ ஏற்படுத்திய ‘வைரல் வீடியோ’.. ‘எப்படி வளர்ந்ததென வெளிவந்த உண்மை’..
- திருமணத்தின்போது ‘நடனமாடுவதை நிறுத்தியதால்’.. இளம்பெண் ‘முகத்தில் சுட்ட பயங்கரம்’.. ‘பதறவைக்கும்’ வீடியோ..
- ‘ரயில் முன்’ சிக்கிய பயணி.. ‘தன் உயிரையும்’ பொருட்படுத்தாமல் காவலர் செய்த காரியம்.. ‘நூலிழையில்’ தவிர்க்கப்பட்ட ‘பயங்கரம்’..
- 'பிரிந்து சென்ற காதல் மனைவி'... 'டிக் டாக் வீடியோ பதிவிட்டு'... 'இளைஞர் எடுத்த விபரீத முடிவு'!
- கொஞ்சம் ‘ஓவரா தான்’ போய்ட்டோமோ?.. ‘பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும் முடியாமல்’.. ‘பொங்கி எழுந்த மாப்பிள்ளை’..
- ‘அலைச்சறுக்கு’ விளையாட்டின்போது.. ‘திடீரென’ தாக்கிய சுறா.. ‘அடுத்த நொடி’ நடந்த ‘அதிசயம்’.. ‘பதறவைக்கும் வீடியோ’..