முதலிரவு அறையில் ரகசிய கேமரா.. ‘என்னது இதெல்லாம் உங்க வேலை தானா..!’ ஷாக்குக்கு மேல் ஷாக்.. புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடுமை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

முதலிரவு அறையில் பொருத்திய ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்து பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கொச்சி கடவந்தறா பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஸத்தர். இவர் திருமணத்துக்காக பெண் தேடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது திருமண தரகர் ஒருவர் மூலம் காசர்கோடு நாயன்மார்மூலை பகுதியைச் சேர்ந்த ஸாஜிதா (30) என்ற பெண் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஸாஜிதாவின் பெற்றோர் எனக் கூறிக்கொண்டு என்.ஏ.உம்மர் (41) அவரது மனைவி பாத்திமா (35) ஆகியோர் அப்துல் ஸத்தரிடம் திருமணம் குறித்து பேசியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி அப்துல் ஸத்தாருக்கும், ஸாஜிதாவிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்துக்கு பின்னர் இருவரையும் தங்க வைப்பதற்காக கொவ்வல்பள்ளியில் வாடகைக்கு அப்பார்ட்மெண்ட் எடுத்துள்ளனர். அந்த அப்பார்ட்மெண்ட்டில் வைத்து அப்துல் ஸத்தாருக்கும், ஸாஜிதாவிற்கும் முதலிரவு நடந்துள்ளது.

அவர்களது முதலிரவு நடப்பதற்கு முன்பே அப்பார்ட்மெண்டில் சிலர் ரகசிய கேமரா பொருத்தியுள்ளனர். முதலிரவு நடந்தபின் அந்த வீடியோவை இக்பால் என்பவர், அப்துல் ஸத்தரிடம் காட்டி இதை சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவேன் என மிரட்டி பணம் மற்றும் நகையை கேட்டுள்ளனர். பயந்துபோன அப்துல் ஸத்தர், 3.75 லட்சம் ரூபாய் மற்றும் ஏழரை பவுன் தங்க நகை ஆகியவற்றை கொடுத்திருக்கிறார்.

தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டவே, இதுகுறித்து காஞ்ஞங்காடு காவல் நிலையத்தில் அப்துல் ஸத்தார் புகார் அளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், இந்த திருமணமே போலி திருமணம் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அப்துல் ஸத்தாரை திருமணம் செய்த ஸாஜிதா, அவரது பெற்றோர் எனக் கூறிய என்.ஏ.உம்மர், பாத்திமா மற்றும் வீடியோவை காட்டி மிரட்டிய இக்பால் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து கூறிய போலீசார், ‘என்.ஏ.உம்மர் மற்றும் பாத்திமா ஆகியோர் கணவன் மனைவிதான். ஆனால் அவர்கள் ஸாஜிதாவின் உண்மையான பெற்றோர் அல்ல. இவர்கள் ஸாஜிதாவை போலியாக திருமணம் செய்து வைத்து அவர்களின் முதலிரவு நடக்கும் அறையில் ரகசிய கேமரா பொருத்தியுள்ளனர். பின்னர் அந்த வீடியோவைக் காட்டி அப்துல் ஸத்தாரை மிரட்டி பணம் பறித்துள்ளனர். ஸாஜிதா இதுபோன்று ஏற்கனவே கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் திருமண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது’ என கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்