‘ஒன்னு இல்ல ரெண்டு 25 வருசமா இது தொடருது’!.. எப்படிங்க இது சாத்தியம்.. அசர வைத்த நண்பர்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் 25 ஆண்டுகளாக இரு நண்பர்கள் ஒரே மாதிரியான ஆடை அணிந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரவீந்திரன் மற்றும் உதயக்குமார். நெருங்கிய நண்பர்களான இருவரும் தையல் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தங்களது நட்பை வெளிப்படுத்தும் விதமாக தினமும் ஒரே மாதிரியான ஆடையை அணிந்துக் கொள்கின்றனர். கிட்டதட்ட 25 ஆண்டுகளாக இதை கடைபிடித்து வருகின்றனர்.

எப்படி இது சாத்தியம்? என அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து தெரிவித்த அவர்கள், ‘சட்டை, பேண்ட் தைக்க இருவருக்கும் ஒரே துணியை வாங்கி தனித்தனியாக தைத்து அணிந்து கொள்வோம். தினமும் காலை என்ன உடை அணிவது என இருவரும் பேசி வைத்துக்கொண்டு அதே மாதிரி அணிந்து வருவோம்’ என தெரிவித்துள்ளனர்.

பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே இருவரும் நண்பர்களாக இருந்து வருகின்றனர். தற்போது இருவரும் இணைந்து ‘பிகே டெய்லர்ஸ்’  என்ற கடையை நடத்தி வருகின்றனர். தினமும் ஒன்றாக ஆடை அணியதற்காக 40 ஜோடி ஆடைகளை இருவரும் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த வினோத நட்பு அனைவரும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்