'ஃப்ரண்ட்ஸ்தான் காரணம்!'.. 'பெற்றோரை நடுநடுங்க வைத்த 10-ஆம் வகுப்பு மாணவன்'.. 'தந்தையின் பாராட்டுதலுக்குரிய முடிவு'!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவின் கொச்சி, வடுதலையைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவரின் போக்கில், நடத்தையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது.

இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், தங்கள் மகனை கண்காணிக்க ஆரம்பித்தனர். ஒரு நாள் இரவில் தள்ளாடியபடி வீட்டுக்கு வந்த மகனை அவர்கள் விசாரித்தபோது, நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு சென்று வந்ததாக சமாளித்துள்ளான். எனினும் அடுத்த ஒரு நாள் இரவில், நள்ளிரவில் வீட்டில் உள்ள தனது ரூமில் படுத்திருந்த மாணவன், காலையில் பார்க்கும்போது காணவில்லை. இதனால் பதறிய பெற்றோர்கள் மாணவனை தேடியுள்ளனர். ஆனால் வீட்டின் மொட்டை மாடியில், தண்ணீர் தொட்டி அருகே சுருண்டு படுத்துக் கிடந்துள்ளான்.
அதன் பிறகு மாணவனின் பெற்றோர்கள், கவுன்சிலிங் கொடுக்க அழைத்துச் சென்றபோது, தனது நண்பர்கள் தன்னை போதை பழக்கத்துக்கு அடிமையாக்கிவிட்டதாக மாணவன் கூறியது பெற்றோர்களை அதிரவைத்தது. ஆனாலும், அந்த மாணவனின் தந்தை, முற்போக்காக யோசித்து, தனது மகனின் இந்த நிலையை இலகுவாக கையாண்டுள்ளதுதான் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
அதன்படி, 18 வயது பூர்த்தியாகாத தனது மகனுக்கு போதை வஸ்துக்களை கொடுத்து போதைக்கு அடிமையாக்கி, தவறான வழிக்கு கொண்டு சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி கொல்லம் வேலியாத்தைச் சேர்ந்த டெறின் பீட்டர் (18), குறுவந்துறையைச் சேர்ந்த அதுல் அஜு(19), அலன் பிராங்கிளின் ஆகிய மூன்றுபேரை போலீஸார் கைது செய்து விசாரித்ததில், அவர்கள் பல மாணவர்களுக்கும் போதைப் பொருள் சப்ளை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.
தன் மகன் தவறான பாதைக்கு சென்றபோது, மகனைக் கடிந்துகொள்ளாமல், நல்வழியில் திருத்த முயற்சித்துள்ள இந்த தந்தையின் செயல்பாட்டை, பலரும் பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- டெய்லியும் ஆட்டோவுல... ஸ்கூல் போறப்ப பயமா இருக்கு... ஹைகோர்ட் நீதிபதிக்கு... கடிதம் எழுதிய 3-ம் வகுப்பு சிறுவன்... !
- 'எமனாக வந்த ஊஞ்சல்'...'கழுத்தை சுற்றிய நைலான்'...'பெற்றோர் முன்பு சென்னையில்' நடந்த கோரம்!
- ‘300 அடி பள்ளம்’!.. ‘தாறுமாறாக ஓடி அந்தரத்தில் தொங்கிய லாரி’!.. நூலிழையில் தப்பிய டிரைவரின் திக்திக் நிமிடங்கள்..!
- 'ஸ்கூல்' படிக்கும் போது காதல்'...'திடீரென நடந்த சந்திப்பு'...'பள்ளி காதலிக்காக' கணவன் செய்த கொடூரம்!
- 'பசியில் வாடிய முதியவருடன் தன் உணவுப் பொட்டலத்தை பகிர்ந்துகொண்ட காவலர்'.. கலங்கவைக்கும் வீடியோ!
- ‘முதலாளின் கடைசி ஆசை’!.. ‘60 வயதை கடந்தும் காதல்’!.. முதல் முறையாக முதியோர் இல்லத்தில் நடக்கும் காதல் திருமணம்..!
- மனைவி காட்டிய ‘இரக்கத்தால்’... கணவருக்கு அடித்த ‘அதிர்ஷ்டம்’... ஒரே நாளில் மாறிய ‘வாழ்க்கை’...
- 'மச்சி.. அந்த பொண்ண..!!'.. 'ஸ்கூல்லயே இப்படியா?'.. மாணவர்களின் 'வாட்ஸ் ஆப் சாட்டிங்'.. 'நடுங்கும் மாணவிகள்'!
- 'நம்பி சாமி கும்பிட வந்த பள்ளி மாணவி..' கூல் டிரிங்கில் மயக்க மாத்திரை கலந்து 'கோயில் பூசாரி' செய்த 'கொடூரம்!
- இளைஞரை ‘அடித்து’ ஏற்றிச் சென்று... ‘ஆட்டோ’ ஓட்டுநர்கள் செய்த ‘நடுங்க’ வைக்கும் காரியம்... ‘வயலில்’ சடலமாகக் கிடந்த கொடூரம்...